காஞ்சிபுரம் பட்டு உண்டா
பச்சை கலர் எடுங்களேன்
முந்தானை டிசைன் சரியில்லை
நூல் ஒன்னும் அவ்வளவு
ஒசத்தியா இல்லையே
இதுலயே மாங்கா டிசைன் இருக்கா
அகலமான ஜரிகைல எடுங்க
எல்லாம் சரிதான் ஜாக்கெட் துணி
நல்லா இல்லையே
பாடர் கலர்ல ஜாக்கெட் வர்ர மாதிரி
இதே டிசைன்ல இதே கலர்ல
வேற புடவை எடுங்களேன்
என்னமோ இது ஒகே மாதிரி தான்
தெரியுது !
என்னமோ இருக்கட்டும் இந்த கலர்ல
என்கிட்ட புடவையே இல்ல
அதானல எடுத்துக்கிறேன் !
என்றவளை வெரித்து வேடிக்கை பார்த்து
கையில் இருந்த காசை கணக்கு பார்த்து
வருடத்திற்கு ஒருமுறை வாங்கும் அந்த
ஒரு நூல் புடவையை வாங்கிச்சென்றாள்
என் ஏழைப் பெண் !