உச்சிவெயில் பிச்சைக்காரி

71 14 8
                                    

ஓரஞ்சாரம் பாத்து
நடபாதைக்கு வலிக்குமோன்னு 
பட்டும் படமா ,
தரைய தொட்டும் தொடாம
உக்காந்திருக்குது பாவப்பட்ட சீவனொன்னு !

சிவனொத்த சீவாத முடி,
சோகமே சோகப்படும் கண்ணு ரெண்டு,
காது மூக்கு கழுத்தெல்லாம்
பாழாப்போன பாலைவனமா
பாளடஞ்சு கிடக்கு !

என்னைக்கோ துவச்சு,
எவனோ கிழிச்ச,
இத்த சீல
வருமையின் வடு - தெரியுற
ஒட்டுப்போட்டும்
மானம் காப்பாத்தாத
சல்லடை ஜாக்கெட்டு !

உயிர் வத்துன முலையில
பாலெங்க இருக்குதுன்னு ,
தன் பங்குக்கு ஒரு கிழிசல மறச்சு
மார்கூட்டுல முகம் புதச்சு
கண்ணுரங்குது அவ குழந்த !

தட்டு வாங்கவும் காசு வேனுமே,
உள்ளங்கைய தட்டாக்கி
ஒருக்கழிச்ச தேகத்துக்கு
ஒன்னு !
ஒட்டுண்னி தேகத்துக்கொன்னுனு
சேமிக்குரா பாதகத்தி !

பார்வையில புணருது ஒரு
கூட்டம் !
இருந்தும் இல்லங்குது ஒரு
கூட்டம் !
இத்தனைக்கும் நடுவுல
அவள தன்பங்குக்கு
கதர கதர கற்பழிக்குது
உச்சிவெயில் !

கிறுக்கல்Where stories live. Discover now