முள் காட்டுப்
புதர் மறைத்த
கரையான் குழியில்
கறை படிந்து
நிலை மறந்து
பாவப்பட்டா மைந்தனாய்
ஒரு மண்ணரித்த மாந்தன்,
தோல்சாய்த்து
கண்தொடுத்து
கைக்கொடுத்து - கணம் நோக்கி
சிறிது
துப்புறவு வாடையும் காட்டினேன்,
கட்டியும் கட்டாமலும்
விலகியும் விலகாமலுமான
சிறு சிற்றாடைச் சரிசெய்தெழுந்தான்
கையூன்றி
நெளிந்து
சாய்ந்து
தரைத்தேடி
சிறு மேடுதட்டி
ஒரு கால் ஒருக
ஒரு கால் மருக
கலையிலந்த கம்பீரமாய்
உடல் சிலுப்பியமர்ந்தான் !இவனா ?
கண்ட உருவம் போல் உளதே !
அச்சுப் பிசகாத
அத்துனை அம்சமும்
ஆம்
அவனே தான்
முன்னொருகாலத்தில்
கைக்கூப்பியிருர்தேன் !
இருப்பினும் இன்று ?
இருந்தாலும்
இவன் வடக்கத்தான் ஆயிற்றே
தமிழறிவான - நானோ தமிழன்றி ஏதுமறியேன்
இருப்பினும்
கேற்பதை கேட்டுவிடுவோமென்பது - என் தின்னம்நானுமமர்ந்தேன்
அவனெதிரேவர்ண பேதமில்லை
வேத மொழியுரைக்க தேவையில்லை
கயிருகளில் அவன் கட்டியுருக்கவில்லை
கேள்விகள் ஆயிரமென்றேன்
கேளேன் என்றான்சடாமுடி யேனென்றேன்
குகை வாழ்ந்தவன்
உயிர் காக்க மயிர் சிந்தனையில்லை என்றான்சூலம் யேனன்றேன்
வேட்டைக்கு தானென்றான்உடுக்கை யேனென்றேன்
விலங்கு விரட்ட வேஎன்றான்கஞ்சா யேனென்றேன்
குளிரில் இரைதேட ஊக்காபானமென்றான்புலித்தோல் யேனென்றேன்
நெசவு யாமரியேன் -ஆதி மனிதன்
உடை அது தோல் தானென்றான்சத்திகள் உலதோவென்றேன்
அதுவிருப்பின் ஆயுதம் எனக்கெதுக்கென்றான்இங்கெப்படி வந்தாயென்றேன்
ஆகமப் பூச்சிலென்றான்நீ என்றேன்
மனிதன் தானென்றான் ....