காதலிக்க கற்றுக்கொள்
காதலித்து காதலித்து காதலை காதலி
அவன் விழித்திரையில் நீ விழுந்து விளையாடு
அவள் அகத்திரையில் நீ ஆழ்ந்து கரைசேறு
தனிமையில் சிரி
பேசிப்பேசியே புதிய புதிய பிறவியெடு
மூளையை ஒரு மூலையில் வை
மனதினில் மையல் கொள்
காற்றினில் ஒரு காலஎந்திரம் செய்
அதில் ஆனந்த உலா செல்
கடிகாரத்தை கழட்டி எறியுங்கள்
காத்திருந்ததல் கலை பயிலு
உயர்தினை அஃறிணை பேதமின்றி கொஞ்சியே கொடுமை செய்
கவிதை கிறுக்கு
தூரிகை துவட்டு
மாறி மாறி வர்ணித்து மற்றவரை மாய்
நண்பர்களிடம் பொய் பேச ஒரு பொதிகை கையேடு செய்
பூப்பறித்து பூப்பறித்து தாவரங்களை தகராறு செய்ய தூண்டு
மேகத்தில் ஆர்பரித்து ஆடு
மோகத்தில் மௌன கீதங்கள் பாடு
இளையராஜாவில் இன்பம் கொள்
மதிகெட்டு மீளு
வளையலில் வாழ பழகு
ஆதாமை ஆதரி
ஆதி ஆப்பிளை சுவை
காதலை பருகு
விழியோடு விழிமோதி கொள்
வழி தேடி வழி
பார்த்து பார்த்து பரவசம் அடை
கை கோர்த்து கோர்த்து காதல் ரசம் குழை
நிச்சயித்து காத்திரு
காத்திருந்து பூத்து விடு
உளரி உளரி மாட்டிக்கொள்
மாட்டிக்கொண்டே மனதினை இடம்மாற்றி பூட்டிக்கொள்
ஆழ்ந்து மீளு
மீண்டும் ஆழ்ந்து வாழு.காதலை