ஊருக்கு ஒத்த மரம்
ஓங்கி வளந்த மரம்
ஊர்க்குருவி நின்ன மரம்
இருமாப்பா இருந்த மரம்எங்கப்பன் அவங்கப்பன்
எம்பாட்டன் அவன்பாட்டன்
ஆடி பாடிப்
பார்த்துப் பழகின மரம்எங்க ஊருப் பிள்ளையாரின்
போக்கத்த
போதி மரம்சண்ட
பேச்சு
காதல்
புரணின்னு
சகலமும் சலைக்காம பாத்த மரம்ஊர்ப்பெருசு
ஊச்சிருசு
பட்டி தொட்டி
பஞ்சாயத்திலெல்லாம்
சரி தப்பு பேசாம
டவாளியாவே நின்ன மரம்கிலையெல்லாம் விசிரி வச்சு
காத்துல ராகம் போட்டு
காதுல மெட்டுப் பாடும்
அந்த மரம்ஊருக்கு யெடஞ்சலுன்னு
எவனோ போட்ட கடுதாசில
ஓரமா ஒருக்கழிச்சு
சரிஞ்சிருச்சுசெத்த மரத்துல வெறகு சேமிக்குது
வெக்கங்கெட்ட கூட்டம் ...