பவுசுக்காதல்

58 10 11
                                    

நோம்பி நாளுன்னு
நோகாம நட நடந்தா
ஊரு சனமத்தனையும் ஒருசேர
சுத்துதாத்தா !

நோம்பி நொடி நமக்னெனத்துக்குன்னு
கோயில் தடத்துல
கூடைக்கட்டி விக்குறா
பார்வதியம்மா ,
ஆருக்கோ பொறந்தவ,
அவ ஆராரயோ பெத்தவ !

எங்கோப்போயி எங்கோ அலஞ்சு
இவடத்தால குத்தவச்சிருக்கா
பல்லுபோன பழைய இளவரசி !

ராசாத்தி அவளுக்கு,
ரங்குப்பெட்டி,
தொறப்பு, தொறப்புக்கா வச்சிக்க
வீடொன்னும் இல்லீத்தா !
ரவைக்கு,
போத்திப் படுத்துக்க
திப்பிட்டியொன்னும் இல்லீத்தா !
சீராடி வந்த சீமாட்டி மகராசிக்கு
காதுல தோடொன்னும் இல்லீத்தா !
சொல்லிக்க தொங்கட்டானுமில்லீத்தா !
கட்டுன மாமன் முற செஞ்ச
கால் மிஞ்சியுமில்லீத்தா !
வீனா எதுக்குன்னு
கையில வளையமுமில்லீத்தா !

அத்தனிக்கும் சேத்து
அந்திடுமோன்னு இத்த
மஞ்சச் சரடொன்னிக்குது
கழுத்து மேல !

இல்லாத ராச்சியத்தின் ராசத்திக்கு
படுக்கக் கோணியிருக்கு,
பிஞ்சா தக்க கோணூசியொண்ணிக்குது !
அவளுக்குன்னு பாத்தியப்பட்ட
கொட்டலாவும் , அதுக்குன்னு
அளவெடுத்துச் செஞ்ச ஒலக்கையும் ஒய்யாரமா இருக்குதுத்தா !

பின்கொசுவமுடிஞ்சு,
குத்தவச்சு
கைய நீட்டி
கவுற எடுத்து !
வெத்தலைய மென்னுட்டே
முத்தாட்டம்
மூங்கிச்சீவள எடுத்து
சிட்டாட்டம்
சிறு சீவல் சீவி
பொட்டாட்டம்
அத பிடிச்சு
அவ மடிச்சு கூட செஞ்சா !
கோழிக்கே ஆச வரும்
அவ கூடைல மொட்டு
வைக்கோனுமுன்னு !

பஞ்சுத்தல பாக்கியவதி,
பன்னாடிப் புண்ணியவதி
ஓரியில இல்லீத்தா !
அவ பாதி அவரின்னு
கூட்டுக்கு ஆளிருக்கு !
கண்ணு கசிஞ்சாலும்
மேலுக்கு எதுன்னாலும்,
மேனக அவதான்னு அவ
காதக் கணவரவரு !

ஒத்த வேட்டிச் சித்தனாரு
ஓயாத சிரிப்புக்காரரு
முன் பல்லு இல்லீன்னாலும்
மொகரைக்கொன்னும் கொரச்சலில்ல !

இருந்தாலும் இல்லாட்டாலும்
அழுதாலும் தவிச்சாலும்
அசராம நிக்கும் அவரொடது
பழசானக்காதல்னாலும்
ரொம்பப் பவுசான காதல் தானாத்தா !

கிறுக்கல்Where stories live. Discover now