அறிவார்ந்த முட்டாள்

42 8 4
                                    


தினம் காலை

எட்டைமுக்கால் பள்ளிக் கூடத்திற்கு

ஏழரைக்கே சென்று

வவ்வாள் தின்று போட்ட

பாதம்கள்பழம் பொறுக்கி

அதை சுவத்து


ப்ரேயர் முடித்து

தமிழ் வாத்தியாரிடன் அடிவாங்கி

அவரை அசிங்காய் சுவற்றில்

எழுதி தமிழையும்


இங்கிலீஸ் மிஸ்ஸின்

செண்டு பாட்டில் பெயர்தேடி

ஆங்கிலத்தையும்


கணக்கு வாத்தியாரின்

வண்டியை பஞ்சர் செய்ய

நெம்பர் நோட் செய்து

கணக்கையும்


சயின்ஸ் மிஸ்ஸின்

அழகில் மயங்கி

ஆராய்ச்சிகள் பல செய்து

அறிவியலையும்


சோசியல் சயின்ஸ்

வாத்தியாரின் அடிக்கு பயந்தாலும்

அவர் பெண்ணை ஃபாலோ செய்து

சமுக அறிவியலையும்


பாடப்புத்தகத்தில் இல்லையெனினும்

கழிவறை சுவருகளில்

பாலியல் கல்வியையும் கற்ற

யாரும் கஷ்டப்படமால் உருவாகிய சில

அறிவார்த முட்டாள்களில் நானும்

ஒருவன் !

கிறுக்கல்Where stories live. Discover now