ரணம் 5

320 6 1
                                    

கங்கா அரும்பகோட்டை  வந்து இறங்கியவள் சுற்றி முற்றி பார்த்தாள் சாமி மாமா இருக்காரா என்று அவரை காணாததால் தானே நடந்து செல்ல முடிவெடுத்தவள் முன்பு வண்டியை நிறுத்தினான் சாமி.

என்ன கங்கா வந்து ரொம்ப நேரம் ஆச்சா?. இல்ல மாமா இப்போ தான் இறங்கினேன். உங்களை காணும் அதான்
நடந்தே போகலாம்னு நடக்க துடங்கினேன் நீங்க வந்துட்டீங்க.

கங்கா வண்டியில் ஏறி அமர்ந்ததும் அவர்களை தாண்டி வீட்டை நோக்கி சென்றது ராஜா ஜீப். இருவரையும் விழிகள் சிவக்க முறைத்து பார்த்தவன் அதே கோபத்தோடு வீட்டு வாசலில் ஜீப்பை கோவத்தோடு நிறுத்தி விட்டு இறங்காமல் அதிலேயே அமர்ந்து இருந்தான். சாமி வண்டியை வீட்டு வாசலில் நிறுத்தி கங்காவை இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டான்.

கங்கா தான் எடுத்து வந்த சின்ன பையை இறுக்க பிடித்தபடி அங்கு ஜீப்பில் அமர்ந்து இருப்பவனை நிமிர்ந்து பார்க்காமல் உள்ளே சென்றாள்.

சரியாக அதே சமயம் வெளியே வந்தனர் ராஜேஸ்வரி, ரேவதி, அவள் மகள்கள். கங்காவை பார்த்ததும் நால்வர் கண்ணிலும் அத்தனை குரோதம்.

யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தங்கள் குடிசைக்குள் சென்றவள் அங்கு கிடக்கும் அன்னையையும், அவர் நிலையையும் கண்டு கத்தம் வராமல் கதறி அழுதாள். வாயை மூடிய படி அவள் அழும் காட்சியை அந்த பக்கமாக சென்ற ராஜா கண்களில் விழுந்தது.

காய்ந்த சருகாக கிடக்கும் அன்னையை பார்க்கும் போது இதயமே வெடித்து போனது. வெளியே நிற்க்கும் ரேவதியை கண்டதுமே கங்காவுக்கு மூச்சு கூட விட முடியவில்லை.

அப்போதே தெரியும் தன் தாய் நிலை மோசமாக இருக்கும் என்பது. பஞ்சமி எதோ சத்தம் கேட்க்கவும் கண் விழித்தவர் முன்பு தன் மகள் இருக்கவும் அதை கனவு என்றே நினைத்தவர் அவள் கண்ணீரை கண்டதும் தான் அவள் கனவு இல்லை உண்மை என்பதை உணர்ந்தார்

கோவத்தில் அவள் கன்னத்தில் அறைந்த விட்டார். உடலில் வலு இல்லாமல் போகவும் வேகமாக அடிக்க முடியவில்லை. அதற்கே அவள் முகத்தில் இரு விரல்கள் பதிந்து போனது.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Where stories live. Discover now