ரணம் 17

56 2 0
                                    

கங்கா கொஞ்ச நேரம் கண் மூடிக் ஓய்வெடுத்தவளை அடுத்த அடுத்த வேலைகள் அழைக்கவும் தன் காலில் உள்ள காயத்தை கண்டு கொள்ளாமல் தன் பணிகளை செய்ய துவங்கினாள்.

இரவுக்கு ராஜா அறைக்கு செல்ல விரும்பாதவள் தன்னுடைய குடிசையில் படுத்து கொண்டாள். ராஜா தோட்டத்துக்கு சென்றவன் வந்து பார்க்க தன் மனைவி அறையில் இல்லாததை கண்டு அமைதியாக சட்டையை அவிழ்த்து வைத்து விட்டு எதோ ஒரு புக்கை படிக்க துவங்கினான்.

காலை கங்கா திரும்பவும் ராஜா கட்டிலில் இருந்து எழவும் குழம்பி போனாள். எப்படி நைட் குடிசைல தானே படுத்தோம் எப்படி இங்கே என்று யோசித்தபடி திரும்பியவள் அதிர்ந்து போனாள் அவள் அருகில் ராஜா படுத்திருந்தான்.

பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தவள் மனம் தாறுமாறாக அடித்து கொண்டது. நான் எப்படி ஐயா பக்கத்துல படுத்தேன் என்றவள் அடுத்து யோசிக்க நேரம் இல்லாமல் மணியை பார்க்க 4 என்று காட்டவும் வேகமாக குளித்து விட்டு ரணமான மனதுடன் நடு கூடத்திற்கு வந்தாள்.

அந்த இடம் அவளின் பழைய ரணங்களை மீண்டும் கிளறி விட்டது அங்கு வைத்து தான் அவமான பட்டு அந்த வீட்டை விட்டு வந்தவள் அதன் பிறகு அவர்கள் வீட்டு வாசலில் கூட அடி வைக்க வில்லை.

அறியா வயதாக இருந்தாலும் ரணம் மாறவில்லை. வலியும் அவளை விட்டு போகவில்லை.பிடிவாதகாரி கங்கா என நிருபித்து காட்டினாள். அதன் பிறகு தான் அவள் தன் நிலை அந்த வீட்டில் என்ன என்பதை முழுதாக உணர்ந்து ஒதுங்கி கொண்டாள்.

தனக்குள் உண்டான ரணத்தை மென்று விழுங்கியவள் ராஜா கொடுத்த வேலையை செய்ய பூஜை அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.

கால், கை நடுங்கியது ராஜேஸ்வரி வந்தால் ஆடும் ஆட்டத்தை நினைத்து. எது நடந்தாலும் ஐயா கொடுத்த வேலையை செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தவள் சிவனை சுத்தம் செய்து பூஜை அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்து முடித்தவள் பூஜைக்கு தேவையான பூக்களையும் தோட்டத்தில் இருந்து பறித்து வந்து கூடைக்குள் போட்டு பூஜை அறையில் சிவன் காலடியில் வைத்தாள்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Onde histórias criam vida. Descubra agora