நந்தன் கேட்ட கேள்விக்கு திமிராக பார்த்துக் கொண்டிருந்தார் அந்த நிலையிலும். வாயை திறக்கவே இல்லை.
மற்றவர்களுக்கு ராஜேஸ்வரி ஒரு கொடூரமாக தெரிய யாரை பற்றியும் கவலை பட வில்லை கொலை வெறியுடன்
கங்காவை முறைத்துக் கொண்டிருக்க
நந்தன் அதற்க்கு மேல் பொறுமையாக இருக்கக் முடியாமல் ராஜா உங்க பாட்டியை போலீஸ் கிட்ட ஒப்படைச்சிடுவோம் அவுங்க பாத்துப்பாங்க எல்லாத்தையும் உனக்கு எந்த வருத்தமும் இல்லயே?.ராஜா அதே திமிரோடு என் பாட்டி செத்துட்டாங்க இனி நீ யாரை வேணாலும் போலீஸ்ல புடிச்சி குடு எனக்கு எந்த கவலையும் இல்ல என்றான் தன் கங்காவை தாங்கி பிடித்தபடி.
உண்மையில் ராஜாவுக்கு ராஜேஸ்வரி இப்போது மூன்றாவது மனிதர் தான் அவன் மனம் அந்த அளவுக்கு அவரை வெறுத்து இருந்தது.
ராஜாவின் வார்த்தைகளை கேட்ட ராஜேஸ்வரி ஆங்காரமாக சத்தம் போட்டு சிரித்தவர் நீ போலீஸ் இல்ல கடவுளையே வர வச்சாலும் நான் எதுக்குன்னு சொல்ல மாட்டேன். என் வாய்லேந்து ஒரு வார்த்தையை யாரும் வாங்க முடியாது.
எத்தனை பேர் வாந்தாலும் இந்த ராஜேஸ்வரி சமாளிப்பா அதுக்காக நான் உண்மையை மட்டும் சொல்லவே மாட்டேன்.நந்தன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கேட்ட கேள்வியில் ராஜா முதல் அனைவரும் ஆடி போனார்கள்.
நந்தன் கையை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு ராஜேஸ்வரியை கூர்மையாக எடை போட்ட படி அப்போ உங்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்
தெரிஞ்சி கிட்டு எனக்கு எதுவுமே தெரியாதுன்னு ஊரை ஏமாத்தி வாழ்ந்துட்டு இருந்து இருக்கீங்க.கங்கா அம்மா பஞ்சமியை சீரழிச்சது யாருன்னு தெரியும் உங்களுக்கு கங்கா பிறப்புக்கு காரணம் ஆன கேடு கெட்ட பொறுக்கி நாய் யாருன்னு தெரியும் உனக்கு. அந்த பொறுக்கி யாருன்னு தெரிஞ்சுகிட்டே எல்லாரையும் முட்டாள் ஆக்கி இருக்கீங்க அப்படி தானே.
ஒரு நொடி ராஜேஸ்வரி ஆணி வேர் கூட ஆட்டம் கண்டு போனது நந்தன் கேட்ட கேள்வியில். அதுவும் இதுவரை கண்டு பிடிக்க முடியாத விஷயத்தை நந்தன் கண்டு பிடித்து விட்டதை நினைத்து
முகம் வியர்த்து போனது பயத்தில் ராஜேஸ்வரி முகத்தை வைத்தே அனைவரும் கண்டு கொள்ள அனைவருக்கும் ச்சீ என்று இருந்தது.
![](https://img.wattpad.com/cover/362763497-288-k729275.jpg)
STAI LEGGENDO
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Storie d'amoreதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?