ரணம் 75

316 5 0
                                    

மூவரும் ஒன்று போல் தெரியாது என்று தலை அசைக்க. பிரியா நகுலனை முறைத்தபடி எங்க டா நீங்க சொன்னீங்க நாங்க தெரிஞ்சிக்க இன்னைக்கு தான் கங்கா போற போக்குல சொல்லிட்டு போற இல்லன்னா எங்களுக்கு தெரிஞ்சே இருக்காதே.

எப்பவாவது வாய் திறந்து சொல்லி இருப்பீங்களா? எதோ இப்போ வந்து தெரியா தான்னு ஒரு கேள்வி கேக்குற.

அப்பறம் எதுக்கு ரியா ஹாஸ்பிட்டல் வராம வீட்டுல இருக்கா?.நந்தனுக்கும் அதே சந்தேகம் இருக்க நகுலன் சொல்ல போகும் பதிலை ஆவலாக எதிர் பார்த்துக் கொண்டிருந்தான்.

நகுலன் சிரித்தபடி ரியாக்கு வேலைக்கு போறது பிடிக்கல. படிச்சதே இவ பெரிய ஆச்சர்யம் தான். ரியாக்கு எப்பவுமே படிக்கிறதும் பிடிக்காது. கங்கா டாக்டருக்கு படிக்க போறேன்னு சொன்னதும் இவளும் அதையே படிச்சா.

வீட்டை விட்டு கோவிச்சிட்டு போனாலும் இவளுக்கு மாசா மாசம் பணம் போய்டும்.
சாப்பிட்டு சாப்பிட்டு சும்மா இருக்க பிடிக்காம சுயமா யோசிச்சு செலக்ட் பண்ண தெரியாம டாக்டர் சேர்ந்துட்டா.

படிச்சி முடிக்கிற வரைக்கும் டெய்லி கால் பண்ணி புலம்பி தள்ளுவா என் கிட்ட.
வெறும் எம்பிபிஎஸ் மட்டும் தான் படிச்சா. அதுக்கு மேல ஸ்பெஷல் எதுவும் படிக்கல உங்கள மாதிரி. வீட்டுக்கு வந்ததும் சொன்ன முதல் வார்த்தை என்னை வேலைக்கு போக சொல்லவே கூடாது யாரும். நான் வேலைக்கு போகவே மாட்ட
என்ன கட்டாய படுத்துனா நான் திரும்பவும் எதாவது ஹாஸ்ட்டல் போய்டுவன்னு சொல்லிட்டா.

யாரும் ரியாவை கட்டாய படுத்தவும் இல்ல. அவளுக்கு பிடிச்சா மாதிரி இருக்கட்டும்னு விட்டுட்டோம். நான் ஒரு நாள் கேட்ட அதுக்கு அவ கல்யாணம் ஆகி போனதும் எப்பவும் வேலை தானே செய்ய போற. அம்மா வீட்டுல இருக்க வரைக்கும் சந்தோஷமா எந்த டென்ஷனும் இல்லாம இருக்கன்னு சொல்லிட்டா அதுவும் சரிதான் நானும் எதுவும் சொல்லல.

பிரியா அமைதியாக ரியாவை பார்த்தவள் எதுக்கு படிச்சோம்னு தெரியலனாலும் பேருக்கு பின்னாடி ஒரு படிப்பை சேர்க்கவாது ரியா படிச்சிட்டா. அவ சொன்னதும் சரி தான் கல்யாணத்துக்கு அப்பறம் எல்லா பொண்ணுங்க வாழ்க்கையும் நாய் பொழப்பு தான் இப்போ ஜாலியா இருக்கட்டும் விடு.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Donde viven las historias. Descúbrelo ahora