இந்தியா வந்து ராஜேஸ்வரி வீட்டு வாசலில் நின்றவர் அப்படியே அதிர்ந்து மறைந்து கொண்டார். அங்கு விதுஷாவை போல் நிற்க்கும் கங்காவை கண்டு அவருக்கு அப்படி ஒரு பேரதிர்ச்சி.
அன்று தான் கங்கா வேலைக்கு போக வேண்டும் என்பதற்காக பஞ்சமி ராஜேஸ்வரி முன்பு கெஞ்சிக் கொண்டிருந்தார். பஞ்சமி பேசியதை வைத்து அது நான் விதைத்த விதை என்பதை உணர்ந்தவர் உள்ளத்தில் சொல்ல முடியாத சந்தோஷம்.
கங்காவை ஆசை தீர பார்த்துக் கொண்டிருந்தவர் மூளை வேறொரு கணக்கு போட்டது. என்ன தான் இவளும் தன் உயிர் அணுவில் உருவானவளாக இருந்தாலும் இவள் வேறு அல்லவா இவள் தன் மகள் என்பது யாருக்கும் தெரியாது. ராஜேஸ்வரி பஞ்சமியை கேவள படுத்தியதை வைத்து பஞ்சமி தன்னை பற்றி யாரிடமும் சொல்ல வில்லை என்பது அவருக்கு புரிந்து போனது.
ராஜேஸ்வரி முன்பு அவமான பட்டு நிற்க்கும் பஞ்சமியையும், தன் மகளையும் பார்க்கும் போது அவருக்கு உயிர் துடித்தது. பஞ்சமிக்கு தான் செய்தது இழிவான செயல் என்றாலும் அவளை விரும்பியதால் அப்படி செய்தேன் என தன்னை தானே பல முறை தேற்றிக் கொண்டுள்ளார்.
அவர்களை நெருங்காமல் தன்னை பற்றிய உண்மை யாருக்கும் தெரியாதது தெரியாமலே போகட்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து சத்தம் இல்லாமல் கிளம்பினார்.
தயாளன் இந்தியா வந்து சென்றது அவரின் பிஏவாக இருந்த சஞ்சைக்கு மட்டுமே தெரியும். சஞ்சய் உடனே பல்லவனை அழைத்தவன் தயாளன் இந்தியா சென்றதை கூற பல்லவனுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மிருகத்தை எழுப்பியது போல் ஆகியது.
சஞ்சய் எதுக்கு தயாளன் இந்தியா போனானு தெரியுமா?.
இல்ல சார் எனக்கு தெரியாது அவர் என் கிட்ட சொல்லல.. ஆனா அவர் கண்டிப்பா பஞ்சமி அவுங்களை பாக்க தான் போய் இருக்கணும். சஞ்சய் தலையில் அடித்துக் கொண்டவன் சார் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்ட விதுஷாக்கு ஹாட் பிராப்பலம் இருக்கு இல்லையா அதுக்கு அவுங்க இரத்த சம்பந்த பட்டவங்க இருந்தா அவுங்க ஹார்ட் பொருத்தலாம்னு நான் நேத்து கேள்வி பட்ட.
ВЫ ЧИТАЕТЕ
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Любовные романыதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?