ரணம் 70

21 2 0
                                    

சஞ்சய்க்கு கிராமம் புதிது அதிலும் திரும்பும் இடம் எல்லாம் தெரியும் பசுமையை பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது சஞ்சய்க்கு. தூரத்தில் இருக்கும் போது இருந்த பயம் அருகில் வந்ததும் இல்லை. அதிலும் கங்கா, ராஜாவின் காதலை கண் கூடாக கண்ட பிறகு கட்டாயம் லாராவால் கங்காவை தொட முடியாது என புரிந்து கொண்டான்.

லாரா கங்காவை நெருங்க ராஜா அனுமதிக்க மாட்டான் என்பதையும் உணர்ந்து கொண்டவன் பயத்தை விட்டு விட்டு சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
அதிலும் ராஜா வீட்டு தோட்டத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தவனை தொந்தரவு செய்தது அவனின் செல் போன் ஒளி.

எவண்டா அது என்னோட இனிமையான தனிமையை கெடுத்தது.. கடுப்பாக எடுத்து பார்க்க திரையில் மின்னியது லாரா என்ற பெயர். அட அட வில்லி என்ன வில்லி ஆள் மாத்தி எனக்கு கால் பண்ணுது. ஒரு வேளை ராஜா கிட்ட நேரா பேச வெக்க பட்டு எனக்கு கால் பண்ணுதோ என்னனு தான் கேப்போம்..
அட்டன் பண்ணி காதில் வைத்ததும் லாரா பேச துவங்கி விட்டாள்.

என்ன சஞ்சய் சம்பளம் எங்க கிட்ட வாங்கிட்டு விசுவாசத்தை வேற இடத்துல காட்டிட்ட போல நக்கலாக ஒலித்தது லாராவின் குரல்.

ஆமா மேடம் சம்பளம் யார் கிட்ட வாங்குனா என்ன நான் வேலைக்கு சேர்ந்ததே பல்லவன் அங்கிலுக்காக தான்
ஒன்னும் சும்மா சம்பளம் வாங்கள வேலை செஞ்சிட்டு தான் வாங்குன... அவளை விட அதிகமான நக்கலோடு சொல்ல லாரா பல்லை கடிக்கும் சத்தம் தெளிவாக கேட்டது.

சஞ்சய் உனக்கு கடைசி வாய்ப்பு தர அந்த கங்காவ என் கிட்ட ஒப்படைச்சிடு இல்லன்னா ஒருத்தரும் உயிர் பிழைக்க முடியாது. சஞ்சய் அவளின் மிரட்டலில் சிரித்தவன் நீ என் உயிர கூட எடுத்துக்கோ எனக்கு கவலை கிடையாது.

ஆனா கங்காவை மட்டும் ஒப்படைக்க முடியாது.

உங்களுக்கு தான் மனசாட்சியே இல்லயே
இந்நேரம் நீங்க எதாவது பண்ணி இருப்பீங்க எனக்கு கால் பண்ணி பேசுற ரகம்லா இல்லையே நீங்க.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Donde viven las historias. Descúbrelo ahora