ரணம் 29

317 7 0
                                    

வசந்த், செந்தில் இருவரும் எவ்வளவு போராடியும் ராஜாவை அடக்க முடியாததால் ராஜா அது உன் கங்கா உன் கங்காவ தான் கொல்ல பாக்குற. இப்போ மட்டும் நீ அவளை விடல அவ உயிர் போய்டும் என்றதும் பட்டென்று விட்டவன் கங்கா காலடியில் அமர்ந்து சாரி சாரி நான் ஒரு அரக்கன் உன்ன கூட அடையாளம் தெரியாம போய்டுச்சி என்று கெஞ்சி கொண்டிருந்தவன் முகம் சட்டென்று மாறி போனது ஆனாலும் நீ பண்ணினது தப்பு என்னோட பஞ்சுமிட்டாய் துணியை என் கிட்டேந்து பிரிக்க பாக்குற என்றவனை விழி விரித்து பார்த்து கொண்டிருந்தாள் கங்கா.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை நிமிடத்திற்கு நிமிடம் மாறும் ராஜா அவளுக்கு புதிது. அதுவும் யார் அந்த பஞ்சிமிட்டாய் மரத்தில் கூட பஞ்சிமிட்டாய் என்று தானே கிறுக்கி இருந்தது.

எதை எதையோ யோசித்தபடி அடி வாங்கி இரத்தம் வழிய நிற்க்கும் அவன் நண்பர்கள் பக்கம் பார்வையை திருப்ப அவர்களோ ராஜா நிலை கண்டு அழுதபடி ராஜாவின் இரு பக்கமும் அமர்ந்தனர்.

வசந்த் நாக்கு தழு தழுக்க கங்கா நீ எதாவது இவன் கிட்ட பேசும்மா என்றதும்
கங்கா இதயம் பல மடங்காக துடித்தது.
அமைதியாக ராஜாவை பார்த்தாள்
அவன் அதே துணியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நான் உனக்கு வேண்டாமா பஞ்சுமிட்டாய் எதுக்கு உனக்கு சின்ன வயசுலேந்து என்னை மட்டும் பிடிக்கல என்று பேசிக் கொண்டிருப்பவனை கண்டு கண்ணீர் வழிந்தது அவளுக்கு.

வறண்ட இதழை ஈரம் செய்தபடி மென்மையாக அழைத்தாள் ஐயா வென்று அவனிடம் எவ்வித மாறுதலும் இல்லை மீண்டும் மீண்டும் அழைக்க அவன் அப்படியே தான் இருந்தான்.

செந்தில் தயங்கி கங்கா நீ அவனை பேர் சொல்லி கூப்பிட்டு பாரு என்றதும் கங்கா முகம் பயத்தில் வெளுத்து போனது. கங்காவின் பயத்தை கண்டவர்கள்
பயன்படாத கங்கா அவனோட மருந்தே நீ தான் நீ தயங்காம பேசு அவன் சரியாகனும் இப்படியே விட்டுட்டா எங்க நண்பன் பைத்தியமாகிடுவான் கங்கா.
தயவு செய்து அவனை மீட்டெடு.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Where stories live. Discover now