கதறி அழும் சாருமதியை தேற்ற முடியாமல் ரேவதி, உதயா கையை பிசைந்த படி நிற்க்க சாரு தானாகவே ஓய்ந்தவள் தன் முகத்தை அழுந்த துடைத்தபடி தன் தாய் முன்பு நின்றாள்.
எதுக்கு இப்படி பண்ணுன நீ பண்ணுன ஒரு விஷயத்தாள எத்தனை பேரோட வாழ்க்கை மாறி இருக்கு பார்த்தியா இப்போ நீ சந்தோஷமா இருக்கியா இல்ல இல்ல நான் தப்பா கேட்டுட்டேன்.
அப்பாவை ஏமாத்தி கல்யாணம் பண்ணுணியே ஒரே ஒரு நாள் நீ சந்தோஷமா இருந்தியா சொல்லு சொல்லுமா சாருமதி கேள்விகள் சாட்டையால் அடித்தார் போல் இருந்தது ரேவதிக்கு.
இல்ல தான் சாரு நான் ஒரு நாள் கூட சந்தோஷமா இல்ல. அவர் என் கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டாரு. நீங்க கூட விபத்தா தான் உருவானீங்க. பஞ்சமி நல்லா வாழ கூடாதுன்னு பொறாமைல பண்ணுனாலும் நான் அவரை முழுசா விரும்புன சாரு. ஒவ்வொரு நாளும் அவருக்காக காத்திருந்த என் கைக்கு எட்டுற தூரம் தான் அவர் இருந்தாரு என்னால அவரை நெருங்க முடியல.
ஒரே ஒரு நாளாவது அவர் என் கிட்ட சிரிச்சி பேச மாட்டாரான்னு எத்தனை வருஷம் ஏங்கி இருப்ப தெரியுமா.அவர் என்னை ஒதுக்கி வச்சதுக்கு பஞ்சமி தான் காரணம்னு அவ மேல கோவத்தை கொட்டி என்னை நானே சமாதானம் படுத்திப்ப.
பஞ்சமிக்கு உடம்பு முடியலன்னு அவர் துடிச்சதை பாத்ததும் நான் மிருகமா மாறிட்ட எத்தனை நாள் நான் முடியாம படுத்து இருப்ப ஒரு நாள் கூட சாப்ட்டியான்னு கேட்டது கிடையாது ஆனா அவளை பாக்க ஓடி கிட்டே இருந்தாரு அந்த கோவத்துல தான் உன்னை அழச்சிட்டு போய் அவளை தூக்கி அந்த மழைல வெளில போட்டேன்.
ஆனா பஞ்சமி கஷ்ட்ட படணும்னு நினைச்சேன் தான் அவ சாகணும்னு நினைக்கல.
பஞ்சமி செத்த பிறகு தான் நானே எவளோ அசிங்கமானவன்னு உணர்ந்த. தினமும் யோசிக்கிற சாரு அவரு பஞ்சமியை கல்யாணம் பண்ணி இருந்தா சந்தோஷமா வாழ்ந்து இருப்பாரு, பஞ்சமியை சாமி மாதிரி கொண்டாடி இருப்பாரு. அவளும் சந்தோஷமா வாழ்ந்து இருப்பா.
![](https://img.wattpad.com/cover/362763497-288-k729275.jpg)
STAI LEGGENDO
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Storie d'amoreதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?