ரணம் 65

32 2 0
                                    

பல்லவன் தனக்காக இல்லை என்றாலும் தன் குழந்தைக்காக தன் வேதனைகளை தனக்குள் அடக்கி கொண்டார்.

தயாளன் பஞ்சமியை கண்டு பிடித்ததும் அவளை அடைய சந்தர்ப்பம் எதிர் பார்த்து காத்திருந்தார். தயாளன் ஒன்றும் அவ்வளவு கெட்டவன் கிடையாது. அவனுக்கு தெரிந்த வரை தமிழ் நாட்டு பெண்கள் பணத்தை விட மானம் மரியாதையை அதிகமாக நினைப்பவர்கள். அதே போல் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை கொண்டவர்கள் என்று அவன் தாய் சொல்லி கேள்வி பட்டதுண்டு.

பஞ்சமியை முறையாக பெண் கேட்டால் முன்பே திருமணம் ஆன தனக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்பதால் அவளை கட்டாயபடுத்தி அடைந்து விட்டால் வேறு வழி இல்லாமல் தனக்கே திருமணம் செய்து வைத்து விடுவார்கள் பஞ்சமியை திருமணம் செய்து கனடா அழைத்து சென்று விடலாம் என்ற ஆசையில் தனிமையை எதிர் பார்த்து காத்திருந்தார் எதை பற்றியும் பின்னால் வர போகும் கலவரங்களை பற்றியும் யோசிக்காமல்.

ஊர் திருவிழாவில் பஞ்சமி அழகை கண்ட பல்லவனே ஒரு நிமிடம் தடுமாறி போனார். அதிலும் ரேவதியின் சதியை அறிந்த பிறகு அனைத்தையும் உதறி தள்ளி விட்டு பஞ்சமியை தூக்கி கொண்டு வேறு நாட்டுக்கு சென்று விட மனம் துடித்தது.

ஒரு முறையாவது பஞ்சமியிடம் பேசிவிட வேண்டும் என்ற ஆசையில் அவளை பின் தொடர்ந்த பல்லவன் ஒன்றை கவனிக்க தவறி விட்டார் தங்கள் இருவரையும் தன் எம்டி பின்தொடர்ந்து வருவதை.

பல்லவன் பஞ்சமியை தொடர்வதை கண்ட தயாளன் முகம் கோவத்தில் சிவந்தது. பல்லவன் என்ன மன்னிச்சிடு பஞ்சமி எனக்கு சொந்தம். நீ அவளை நெருங்க கூட நினைக்காத எனக்கு தான் பஞ்சமி மனதில் சூளுரைத்து பல்லவன் அவளை நெருங்கும் முன்பே அவளை தன் வசப்படுத்த விடாமல் தொடர்ந்தார் தயாளன்.

பஞ்சமி சாமி முன்பு நின்று தரிசனம் செய்யும் போது பார்த்த பல்லவன் பஞ்சமி விலகி சென்ற போது தவற விட்டுவிட்டார்.

மொத்த ஊரும் கோவிலில் சாமி தரிசனத்தில் கூடி இருக்க பட்டாசு சத்தமும், மக்களின் கூச்சலும், பாட்டு சத்தமும் விண்ணை தொட்டது.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Where stories live. Discover now