ரணம் 12

24 2 0
                                    

இந்த கல்யாணம் நடக்கவே கூடாது அதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன் என்று கூறிய படி கண்ணீரோடு ஓடி வந்தாள் பேச்சி.

ராஜா கங்கா கழுத்துக்கு நேராக நீட்டிய தாலியை பிடித்த படி தன் அம்மாவை கசந்த பார்வை பார்த்தான். ராஜா அம்மா சொல்றதை கேளு கங்காவை விட்டுடு. அவ அம்மா இந்த வீட்டுல அடிமையா இருந்தப்பவே அவளை ஒரு நாள் கூட வாழ விடல நிம்மதியா.

இவளை உனக்கு நல்லதுக்கு இவரு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கல ராஜா. நானே உனக்கு பொண்ணு தேடி கல்யாணம் பண்ணி வைக்கிறேன். கங்கா வேணாம் அவ எங்கயோ போய் நிம்மதியா வாழட்டும். கங்கா வாழனும்னு
தான் பஞ்சமி இந்த நரகத்துல அவ உயிர விட்டா.

உனக்கு பேரழகியா மகாராணி மாதிரி ஒரு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் ராஜா. கங்கா இந்த வீட்டுக்குள்ள வந்தா அவளை உன்னோட பாட்டி உயிரோட தினம் தினம் சாகடிப்பாங்க ராஜா என்றவள் கதறி அழுதார்.

தன் அன்னை கதறியதை கண்டு ராஜா மனம் இறங்க வில்லை. பிடித்த தாலியையும் கீழே இறக்க வில்லை எப்படி நின்றானோ அப்படியே கங்காவை பார்த்தபடி இருந்தான்.பேச்சி வார்த்தைகளை கேட்டு கணபதிக்கு ஆத்திரம் வந்தது பல்லை கடித்து பொறுத்து கொண்டவர் நீ கட்டு ராஜா தாலியை யார் தடுத்தாலும் இன்னைக்கு இந்த கல்யாணம் நடக்கும்.

பேச்சி மனம் துடித்து போனது ராஜா முன்பு தன் மகன் என்றாலும் பரவாயில்லை என நினைத்தவர் தன் முந்தானையை ராஜா முன்பு நீட்டி கங்கா வாழ்க்கையை பிச்சையா கேக்குறேன் ராஜா அவளை விட்டுடுங்க. அவுங்க அம்மாவை கொன்னதோடு போதும் இன்னும் இவளையும் கென்னா தான் உங்க வெறி அடங்குமா விட்டுடு ராஜா
கண்ணீர் ஆருவியாய் ஓடியது பேச்சி கண்ணில் இருந்து.

முடிக்க வேண்டிய கணக்கு நிறைய இருக்கும்மா என் வெறி அடங்குல தான் என்றவன் தன் அன்னை தன் முன்பு பிச்சை கேட்டு நிற்பதையும் பொருட்படுத்தாமல் கண்ணீரோடு தலை குனிந்து நிற்க்கும் கங்கா கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Место, где живут истории. Откройте их для себя