கருப்பாயி, சாமி இருவரும் சென்னை சென்று ஒருவாரங்கள் ஓடி விட்டது. கங்காவும் ராஜாவின் அன்பில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தேற்றி கொண்டாள்.
கங்கா மீண்டும் ஹாஸ்பிட்டல் கிளம்ப நினைக்க அதற்க்கு முட்டு கட்டையாக வந்து நின்றார் ராஜேஸ்வரி.
ராஜா இனி உன் பொண்டாட்டி ஹாஸ்பிட்டல் போக வேண்டாம் வீட்டுல கருப்பாயி கூட இல்ல வீட்டு பொறுப்பை யார் பாக்குறது என்று நடுக் கூடத்தில் நின்று கத்திக் கொண்டிருக்க ராஜாவுக்கு கோவத்தில் கண்கள் சிவந்தது.
ஏன் மற்றவர்களும் ராஜேஸ்வரியை முறைத்தபடி நின்றிருந்தனர். இவர் எப்பவுமே திருந்த மாட்டார் போல என்று நினைத்த பேச்சி அத்தை நான் வீட்டுல சும்மா தானே இருக்க இனி எல்லா வேலையும் நானே பாத்துகுறேன் உங்களுக்கு கவலை வேண்டாம் என்றார்.
தன்னை மறுத்து பேசும் பேச்சியை கண்டு கோவமாக வந்தது ராஜேஸ்வரிக்கு என்ன பேச்சி என் புருஷன் செத்து போனதும் இந்த வீட்டுல என்னோட மரியாதையும் போய்டுச்சு போல என் வார்த்தையை மதிக்க மாட்டியா நீ?.
ராஜேஸ்வரி குரல் கூடம் முழுவதும் எதிரொலித்தது ஆங்காரமாக. ராஜா கையை முறுக்கிய படி தன் பாட்டியை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க ராஜா கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் கங்கா.
கங்காவை நிமிர்ந்து பார்த்த ராஜா விடு கங்கா என்னை. கங்கா கண்ணாலேயே வேண்டாம் என்றவள் அமைதியாக இருங்க எனக்காக குரு என்றதும் அவளை மீறி அவனால் பேச முடியவில்லை. கங்கா ராஜா கையை பற்றியபடி இப்போ என்ன பாட்டி நான் வேலைக்கு போக கூடாது அவளோ தானே எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை பாட்டி நான் வீட்டிலேயே இருக்கேன்.
இது என்னோட வீடு இங்க இருக்க எல்லாரும் என் குடும்பம். அப்போ என் வீட்டையும், என் குடும்பத்தையும் நான் தானே பாத்துக்கணும் நானே பாத்துக்கிறேன்.
ஹாஸ்பிட்டல் எங்க போய்ட போகுது அது அங்கேயே தான் இருக்கும் அதுவும் என் ஹாஸ்பிட்டல் தானே அதுவும் எங்கேயும் நகர்ந்து போய்டாது நான் படிச்ச படிப்பும் மறந்து போய்டாது.
![](https://img.wattpad.com/cover/362763497-288-k729275.jpg)
BINABASA MO ANG
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?