ரணம் 2

63 0 0
                                    

தன் அன்னையை அழைத்து பார்த்தவள் சோர்ந்து போனாள். சிவ கங்காவுக்கும் தெரியும் தன் அன்னை வர மாட்டார் என்று மனம் கேட்க வில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுத்தது கிடையாது. கொஞ்ச நேரம் உடல் வலிக்கு கூட அமர முடியாமல் உழைத்து கொண்டே இருக்கும் தாயை நிம்மதியாக பார்த்து கொள்ளவே பாடுபட்டு இத்தனை துன்பத்திலும்,போராட்டத்திலும் படித்தாள்.

இப்போது அப்படி பட்ட தாயை பார்த்து கொள்ள முடியாத வேதனையில் கலங்கிய கண்ணோடு கிளம்பினாள்.

கங்கா இராஜேஸ்வரி வீட்டை நெருங்கியதும் தன் கண்ணீரை துடைத்து கொண்டவள் அங்கு அமர்ந்து இருக்கும் யாரையும் திரும்பி கூட பார்க்காமல் தன் கையில் பிடித்த பையை இறுக்கமாக பிடித்தபடி  நடக்க துவங்கினாள்.

தங்களை மதிக்காமல் வார்த்தைக்கு கூட சொல்லிக் கொள்ளாமல் நடந்து செல்பவளை ராஜேஸ்வரி வன்மத்துடன்
பார்த்து கொண்டிருந்தார். சிலர் அவளிடம் பேசி வழி அனுப்ப முடியாத வேதனையோடு பார்த்து கொண்டிருந்தனர்.

ராஜகுரு கண் சிமிட்டாமல் வெளியே நடந்து செல்லும் கங்காவை தான் பார்த்து கொண்டிருந்தான். கண்கள் சிவந்து முகம் இறுகி அமர்ந்து இருந்தான். அது கோவமா, இல்லை வேற எதாவதா? அவன் மட்டுமே அறிவான்.

கருப்பாயி செல்லும் கங்காவை மறைந்து நின்று வாழ்த்தி பத்திரமாக புள்ளை ஊருக்கு போய்டனும் ஐயனாரே என கடவுளிடம் வேண்டி கொண்டாள்.

கங்கா கேட்டை தாண்டி தனக்காக காத்திருக்கும் கருப்பாயி மகன் சாமியை நோக்கி சென்றாள். தன் மகளை வழி அனுப்பும் ஆசையில் கேட்டை தாண்டி காலடி எடுத்து வைக்க ஒரு கால் தூக்கிய பஞ்சமியை ராஜகுரு வார்த்தைகள் தடுத்தது.

உன் பொண்ணு மட்டும் தான் வாசலை தாண்டி போக அனுமதி. உனக்கு இல்ல. வாசலை தாண்டி அடி எடுத்து வச்சா உன் பொண்ணு எங்கேயும் போக முடியாது. ராஜா வார்த்தையில் இரண்டு அடிகள் பின்னுக்கு வந்து விட்டார் பஞ்சமி.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Where stories live. Discover now