ரணம் 8

321 8 1
                                    

அடிவாங்கிய ராஜேஸ்வரி திகைத்து நின்றாள். இதுவரை ஒரு முறை கூட தன்னை அதட்டி பேசாத தன் கணவர் தன்னை முதல் முறை அடித்து விட்டாரே
அடி வாங்கிய வலியை விட கணபதி கை ஓங்கியது வலித்தது ராஜேஸ்வரிக்கு.

எதுக்குங்க இப்போ என்னை அடிச்சீங்க காரணமே தெரியாமல் அடி வாங்கி முழித்த படி கேள்வி கேக்கும் ராஜேஸ்வரி மேல் இன்னும் கோவம் அதிகமானது.

ரேவதி தன் தந்தை தாயை அடித்ததை கண்டதும் உறைந்து விட்டாள். அவள் பிறந்ததில் இருந்து அம்மா முகம் வாடும் படி கூட அப்பா பேசியது கிடையாதே அதனால் அதிர்ச்சி அவளுக்கு.

அப்பா என்ன கோவம் இப்போ எதுக்கு சும்மா இருந்த அம்மாவை அடிச்சீங்க.

வாயை மூடுங்க ரெண்டு பேரும். அன்னைக்கு நான் சொன்னதை கேட்காம இன்னைக்கு எதுக்கு அடிச்சன்னு கேள்வி கேக்குற. உன்னை எப்பவோ அடக்கி வச்சிருக்கனும் தப்பு பண்ணிட்டேன் என்றவர் ஊஞ்சலில் அமர்ந்த படி இருவரையும் முறைத்தார்.

அன்னைக்கு அந்த பஞ்சமி பிணத்தை இந்த வீட்டுல போட்டு எடுத்து இருந்தா இன்னைக்கு இவ்வளவு அவமானம் கிடையாது.

இப்பவும் சொல்லுறேன் இனி அந்த கேடுகேட்டவளை பத்தி பேசாதீங்க
இராஜேஸ்வரி குரல் உயர்ந்தது.

கணபதியால் பெரு மூச்சு மட்டுமே விட முடிந்தது. இப்போ அதுக்கு என்னங்க என்ற ராஜேஸ்வரியை தீர்க்கமாக பார்த்தவர் அன்னைக்கு நீ பண்ணுன காரியம் இந்த மொத்த ஊருக்கே நம்ப விரோதியா ஆகிட்டோம்.

அரும்பகோட்டைல பெரிய மனுஷனா எல்லாரும் மதிக்கிற மாதிரி வாழ்ந்தேன் ராஜேஸ்வரி. இன்னைக்கு எல்லாமே போச்சு. இத்தனை வருஷம் நான் கட்டி காப்பாத்துன மானம், மரியாதை எல்லாமே போச்சு.

மூணு நாளா வீட்டுக்குள்ள தானே இருக்க வெளில போய் பாரு தெரியும். ரோட்டுல நம்பலை பாத்தாலே ஒதுங்கி போறாங்க எல்லாரும். ஒரு வார்த்தை கூட பேசல. ஏற்கனவே நீ அந்த பஞ்சமியை கொடுமை படுத்துறன்னு நிறைய பேருக்கு கோவம் இருந்தது அதையும் மீறி நம்ப மேல இருந்த மரியாதைல நம்ப கிட்ட பேசினாங்க.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Where stories live. Discover now