ரணம் 31

327 7 0
                                    

கங்கா வராண்டாவில் அமர்ந்து ராஜா தனக்காக பேசிய அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டே தூங்கி வழிந்தாள். ராஜா கட்டிலில் அமர்ந்து கங்கா தூங்கி வழிவதை பார்த்தவன் 
சின்ன புன்னகையோடு தூங்கிய தன் மனைவியை நெருங்கியவன் உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியவே மாட்டேங்குது பஞ்சுமிட்டாய்.

நீ எப்பவும் தூங்க வேண்டிய இடமே வேற என்று தூங்கும் மனைவியிடம் பேசிக் கொண்டே பூ போல் கைகளில் தாங்கியவன் கங்கா முகம் பார்த்தபடி அவளை கட்டிலின் நடுவில் படுக்க வைத்தவன் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு அவளின் மறுபுறம் படுத்துக் கொண்டான். கங்காவின் நீண்ட முடியை எடுத்து தன் கழுத்தை சுற்றி போட்டு வாசம் பிடித்தான் கண் மூடி.

கங்கா மூக்குத்தியில் முத்தமிட துடித்த உதடுகளை பல்லால் அழுந்த கடித்து தன் ஆசையை அடக்கியவன் நீ எப்போ தாண்டி என்னை ஏத்துக்க போற. உனக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் தவிக்கிற பஞ்சுமிட்டாய்.

நீ இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் என் வாழ்க்கை நரகம் தான் இப்போ ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு சொர்க்கம் தான் பஞ்சுமிட்டாய். நம்ப வாழ்க்கையை
நான் வாழனும் ஆசைபட்டதே வேற மாதிரி
ஆனா எல்லாமே மாறி போய்டுச்சு இனி
என்னை மீறி எதுவும் நடக்காது என்றவன் அவள் கூந்தலை வாசம் பிடித்த படி தன் மனைவி அருகில் நிம்மதியாக தூங்கினான்.

காலை வழக்கம் போல் கங்காக்கு முன்பு எழுந்தவன் தன் கழுத்தில் இருந்த அவளின் கூந்தலை எடுத்து அவள் நெஞ்சில் போட்டவன் அமைதியாக நல்ல பிள்ளை போல் கண் மூடி படுத்துக் கொண்டான்.

வழமை போல் எழுந்து அமர்ந்த கங்கா இன்றும் தான் கட்டிலில் இருப்பதை கண்டு குழம்பியவள் வேக வேகமாக குளித்து விட்டு ராஜா எடுத்து கொடுத்த புடவையில் ஒன்றை எடுத்து கட்டிக் கொண்டு பூஜை அறையை நோக்கி சென்றாள்.

கங்கா வெளியேறும் வரை ஓரக் கண்ணால் அவளை ரசித்தபடி போர்வைக்குள் கிடந்தவன் அவள் வெளியேறியதும் வேகமாக பாத்ரூமுக்குள் நுழைந்தவன் அவள் குளித்த மஞ்சள் வாசத்தில் தன்னை தொலைத்து நின்றிருந்தான்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Where stories live. Discover now