தன் தாயை போட கூட இடம் இல்லாமல் ஒரு ஓரமாக பேச்சி மடியில் கிடக்கும் தாயை கண்டு கதறி துடித்தாள் கங்கா.
அவரின் நிலை கண்ட நந்தனுக்கு கோவத்தில் கண்கள் சிவந்து நரம்புகள் இறுகியது. அங்கு நின்று வேடிக்கை பார்க்கும் ராஜேஸ்வரி குடும்பத்தை கேவலமாக பார்த்தான். அங்கு நிற்பவர்களில் ஒருவர் கூட மனிதர்களே கிடையாது. எல்லோருமே மிருகத்தை விட கோவலமான ஜென்மம்.
அதனால் தானே கங்கா தாய்க்கு இப்படி ஒரு நிலை. இரக்கம் உள்ள மனிதர்களில் ஒருவர் கூடவா இங்கு இல்லை.
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல இருந்தது ராஜேஸ்வரி பேச்சு. ஏய் ஒப்பாரி வைக்க என் வீடு தான் கிடச்சிதா உன் ஆத்தா பிணத்தை தூக்கிட்டு போய் ரோட்டுல போட்டு ஒப்பாரி வை என்றவரை எல்லோருமே வெறுப்புடன் பார்த்தனர்.
அதுவரை ஊருக்குள் உயர்தவர்களாக இருந்தவர்கள் இந்த நிமிடம் ஊர் மக்களுக்கு ராட்ச்சசியாக தெரிந்தார். ஊர் முழுவதும் அசிங்கமாக பார்ப்பதை கண்ட கணபதி தன் மனைவியை அடக்கி விடு இங்கேயே இறுதி காரியம் நடக்கட்டும் என்றதும் எங்கிருந்து அவ்வளவு கோவம் வந்தததோ.
புடவையை தூக்கி சொருகியவர் இப்போவே இந்த பிணத்தை தூக்கி கிட்டு வெளியே போக நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது. என் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணம் நடக்க போகுது கொஞ்ச நாள்ல என் வீட்டுல இந்த அசிங்க புடிச்சவளுக்கு
எதுவுமே நடக்க கூடாது.இங்க பிணம் கூட கிடக்க கூடாதுன்னு சொல்லுறேன் என் வார்த்தையை மீறி யார் நடந்தாலும் அவுங்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ராஜா அங்கு கதறி கொண்டிருக்கும் கங்காவை தான் கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் உள்ளதை யாராலும் உணர முடியவில்லை.
நந்தனின் ஆக்ரோஷமான ஏய் என்ற வார்த்தையில் மொத்த மக்களுமே ஆடி போனார்கள். பிரியாவே ஒரு நொடி நடுங்கி போனாள்.
![](https://img.wattpad.com/cover/362763497-288-k729275.jpg)
YOU ARE READING
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?