பல்லவனை எல்லோரும் பாவமாக பார்த்தனர். ராஜா பூஜை செய்யும் வேலையில் இப்படி கத்திக் கொண்டிருக்கிறார். சாருமதி தன் தந்தை தோளை சுரண்டி ராஜா புறம் காட்டிய பிறகே ராஜாவின் ருத்திரம் கக்கும் விழியை கண்டார்.
அவன் கோவத்தை கண்டதும் பல்லவன் வாய் தானாக மூடிக் கொண்டது. அதன் பிறகு ராஜா பூஜையில் கவனம் பதித்து தன் பூஜையை முடித்து விட்டு வெளியே வந்தான்.
ராஜா வெளியே வந்த நொடியே துவங்கி விட்டார் கணபதியை பார்த்து மாமா என் பொண்ணு ஓடி போகல. என் பொண்ணுங்களை யாரோ கடத்தி இருக்காங்க என்றதும் யாரும் நம்பவில்லை. பல்லவன் எதோ கதை கட்டுவதாக நினைத்துக் கொண்டனர்.
ராஜா பல்லவனை நோக்கி எத்தனை முறை சொல்லி இருக்கேன் மாமா என் பூஜைல யாரும் தொந்தரவு செய்ய கூடாதுன்னு இதே தப்பு திரும்பி நடக்க கூடாது என வார்த்தையை அழுத்தி ராஜா கூறிய விதத்தில் பல்லவன் எச்சில் விழுங்கினார்.
ராஜா வெளியே செல்ல பார்க்க மாப்பிள்ளை என்ன நீங்க பாட்டுக்கு போய்ட்டு இருக்கீங்க நான் உண்மைய தான் சொல்லுறேன் என் பொண்ணுங்க ரெண்டு பேரையும் யாரோ கடத்தி இருக்காங்க.
மாமா நீங்க சொல்றது நம்புறா மாதிரியா இருக்கு நம்ப வீட்டுக்குள்ள வந்து பொண்ணுங்களை கடத்துற தைரியம் வெளி ஆளுங்க யாருக்கு இருக்கு.
அது மட்டும் இல்லாம சாருமதி தானே காணாமல் போனது. உதயா காணாம போனதை யாருமே சொல்லல என்றபடி ரேவதியை பார்க்க அவருக்கு மட்டும் என்ன தெரியும். இப்போது தான் தன்னுடைய மற்றொரு மகளை பார்க்கிறாள்.
பல்லவன் அப்போது தான் உணர்ந்தார் தான் சொன்னதை யாருமே நம்பவில்லை என்று. மாப்பிள்ளை அப்போ என்னை நம்பளையா நான் சொல்றது உண்மை. என் பொண்ணுங்களை யாரோ வீடு புகுந்து கடத்தி இருக்காங்க என்று பல்லவன் கத்திய கத்தலில் ஒரு நிமிடம் கணபதியே ஆடி போனார்.
ராஜா பெரிதாக அதிராமல் சரி மாமா நான் கண்டு பிடிக்கிறேன். அப்படி யாருக்கு என் வீட்டுக்குள்ள புகுந்து கடத்துற தைரியம் இருக்கும்னு நானும் தெரிஞ்சிக்கிறேன். நம்ப வீட்டு பொண்ணு மேல கை வச்சவனை சும்மா விட கூடாது.

YOU ARE READING
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?