ரணம் 33

22 2 0
                                    

கங்கா கரும்பு தின்று முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தவன் அவள் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் வெட்ட போனவனை தடுத்து போதும் இதுக்கு மேல என்னால சாப்பிட முடியல என்றவளை கண்கள் மின்ன பார்த்தவன் என்ன தான் டாக்டர் ஆனாலும் ஒரு முழம் கரும்பை கூட உன்னால ஒழுங்கா சாப்பிட முடியல பஞ்சுமிட்டாய் நீ எப்போ தான் வளர போறியோ என்றவன் சாப்பிட முடியாமல் அவள் கையில் வைத்திருந்த கரும்பை பிடுங்கி ஒரு கடி கடித்தவன் கங்கா பக்கம் நெருங்கி அவள் உடலோடு உரசுவது போல் நின்றவன் நீ கடிச்சதும் கரும்போட ருசியே கூடி போய்டுச்சு பஞ்சுமிட்டாய் என்றவனை விழி அகல பார்த்து கொண்டிருந்தாள்.

அவன் பார்வையில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை பல வருடங்களாக கங்காவை பார்க்கும் அதே பார்வை.
ஆனால் கங்கா ராஜாவை பார்க்கும் பார்வையை மாற்றிக் கொண்டதால் ராஜாவின் பார்வையில் உள்ள ஏக்கமும்,
வலியும் அவளுக்கு புரிந்தது.

மொத்தமாக வயலுக்கு சென்றதால் அவசரம் அவசரமாக வெளியே ஓடி வந்த கணபதி வெளியே தன் ஃபக் இல்லாததை கண்டு பல்லை கடித்தார். அவர் பின்னால் வந்து நின்ற ராஜேஸ்வரிக்கும் கோவம் வந்தது இருந்தாலும் அவசராக வாங்க போகலாம் என்றவள் நடக்க துவங்கினார்.

வீட்டை விட்டு கொஞ்ச தூரம் கூட நடந்து இருக்க மாட்டார் கால் வலி எடுத்து மூச்சு வாங்கியது பயங்கரமாக ராஜேஸ்வரி முதல் முறை இவ்வளவு தூரம் நடக்கிறார். அதுவும் தன் பேரன் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்து விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில்.

ராஜேஸ்வரி பிறந்ததும் பெரிய பணக்கார குடும்பம் கல்யாணம் பண்ணியதும் பணக்கார குடும்பம் என்பதால் ஒரு வேலை கூட செய்து வளர்ந்தது கிடையாது. அதே போல் நடந்ததும் கிடையாது. ராஜேஸ்வரி நடக்கும் ஒரே இடம் வீடு மட்டும் தான் மொட்டை வெய்யலில் நடக்கவும் ராஜேஸ்வரிக்கு வியர்த்து உடல் நடுங்க துவங்கியது.

வேக வேகமாக இருவரும் நடந்து சென்று கண்ட காட்சி கங்கா கையில் இருந்த கரும்பை ராஜா புடுங்கி தின்பதையும் ராஜாவை கண்ணாலையே கங்கா தின்பதையும் தான்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Tempat cerita menjadi hidup. Temukan sekarang