கங்கா அனைத்தையும் ஆற்றில் வீசி விட்டு கொஞ்ச நேரம் மிதக்கும் துணிகளை வெறித்து பார்த்தவள் அமைதியாக திரும்ப அவள் முன்பு கோபத்துடன் வந்து நின்றான் நகுலன்.
நகுலனை பார்த்ததும் பார்க்காதது போல்
ஒதுங்கி நடக்க துவங்கியவளை குறுக்கே கை நீட்டி தடுத்து என்ன கங்கா இதுலாம்.
புது பழக்கமா இருக்கு சரி எதோ கோபத்துல இருக்க சரியாகிடுவன்னு
நினைத்தேன் ஆனா நீ தேவை இல்லாத வேலை பாக்குற.இப்போ என்ன நடந்து போச்சின்னு நாங்க வாங்கி கொடுத்த துணி எல்லாத்தையும் ஆத்துல தூக்கி போட்ட உனக்கு அவளோ திமிரா நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரி இல்ல நானு, அம்மா, ரியா எல்லாரும் மன்னிப்பு கேட்டும் நீ ரொம்ப ஓவரா பண்ணுற தப்பு பண்ணுற கங்கா.
சின்ன பொண்ணா இருக்கியேன்னு பாத்தா நீ அளவுக்கு அதிகமா நடந்துகுற இப்போ என்ன நாங்க குடும்பமா உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும் அதானே உன் ஆசை.
தப்பு நீ பண்ணுன அண்ணனை மரியாதை இல்லாம பேசுனது நீ அதுக்கு நீ தான் மன்னிப்பு கேக்கணும் ஆனா நாங்க உன் பின்னாடி கெஞ்சிகிட்டு இருக்கோம். எல்லாம் நாங்க குடுத்த இடம் தான் அதா எங்க தலை மேல ஏறி ஒக்காந்து ஆடுற என்று கோவத்தில் மீண்டும் வார்த்தைகளை விட்டு ரணமான அவள் மனதை வெறுமையாக்கி கொண்டிருந்தான்.
நகுலன் கத்தியதற்கு கங்கா எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து நின்றவள் ஐயா வழிய விட்டீங்கன்னா நான் போய்டுவேன் யாராவது பாத்தா அப்பறம் நானும் என் அம்மா மாதிரின்னு பட்டம் கட்டிடுவாங்க என்றவள் மறு புறம் திரும்பி ஆற்றை சுத்தி நடக்க துவங்கினாள்.
செல்லும் கங்காவை பார்த்தபடி நின்றிருந்தவன் கன்னத்தில் அறைந்தாள் ஆக்ரோஷமாக ரியா. நகுலனுக்கு அதிர்ச்சி தன் தங்கையா தன்னை அறைந்தது கன்னத்தில் கை வைத்து தடவிய படி எதுக்கு ரியா என்ன அடிச்ச.
தன் அண்ணனை முறைத்தவள் எதுக்குடா இப்படி அண்ணனும் தம்பியும்மா சேர்ந்து கங்காவை கொடுமை படுத்துறீங்க. உங்களுக்கு தான் வாய் இருக்குன்னு என்ன வேணாலும் பேசுவீங்களா?. கங்கா மேல தப்புன்னு தானே சொன்ன நீ அதை சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல உன்னையும் கங்காவையும் சேர்த்து வச்சி தான் அண்ணனும், பாட்டியும் பேசுனாங்க
அவ எவளோ துடிச்சி இருப்பா இப்போ கூட நம்ப சவகாசமே வேணாம்னு தானே ஒதுங்கி இருக்கா அவளை தடுத்து நிறுத்தி இன்னும் அவளை காய படுத்துதுற.
![](https://img.wattpad.com/cover/362763497-288-k729275.jpg)
VOCÊ ESTÁ LENDO
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?