ரணம்46

19 1 0
                                    

அவளின் கடந்தகால வலியை இப்போதும் உணர்கிறாள். கங்கா உடல் சத்தியம் செய்ததை சொல்லும் போதே அதிகமாக நடுங்கியது. அவளை தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டவன் அப்படியே தன் மடியில் அமர்த்தி கொண்டு கங்கா முகம் நிமிர்த்தி அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன் இரு கண்ணிலும் அழுத்தமாக முத்தமிட்டான்.

அவனின் முத்தத்தில் சிவந்து போன முகத்துடன் கண் மூடி அனுபவித்தாள் கங்கா.

யாரால எனக்கு ஆபத்து கங்கா அதுக்கும் நீ என்ன விரும்புறதுக்கும் என்ன சம்பந்தம்?.

இதே கேள்விய நானும் அம்மா கிட்ட கேட்ட குரு அம்மா அமைதியாகிட்டாங்க.பதில்
சொல்லல. எப்பவுமே இப்படி தான் குரு
அம்மாகிட்ட என்னோட பிறப்புக்கு காரணம் யாருன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டாங்க. அப்பா யாருன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டாங்க. உங்களை யாரு கொல்லுவான்னு கேட்டா பதில் சொல்ல மாட்டாங்க. நம்பலை யாரு கண் கண்காணிக்கிறதுன்னு கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாங்க. ரொம்ப பயப்புடுவாங்க குரு.

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா பேச்சிம்மா அம்மாவ தேடி வரும் போது எல்லாம் அம்மாவுக்கும் ஆசை இருக்கும் பேசணும்னு ஆனா யாருக்காக பயப்டுறாங்கன்னு தெரியாது. பேசவே மாட்டாங்க. பயந்து சாவாங்க.

யாரோ எங்களை வாட்ச் பண்ணுறாங்க குரு. எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆனதும் ஒவ்வொரு நொடியும் ரொம்ப பயந்த குரு. எங்க உங்களுக்கு ஏதாவது ஆகுடுமோன்னு. சரி அம்மா தான் எதோ பயத்துல இப்படி பயந்துட்டு இருந்தாகன்னு நினைச்ச.

உங்களை தேடி வயலுக்கு வந்த அடுத்த நாள் ஹாஸ்பிட்டல்ல என்ன தேடி ஒரு கவர் வந்துச்சி அப்போ நந்து, பிரியா என் கூட தான் இருந்தாங்க. அந்த கவரை நந்து தான் பிரிச்சான் உள்ள நம்ப ரெண்டு பேரும் வயல்ல விழும் போது எடுத்த போட்டோவும் அது கூட ஒரு லட்டரும் இருந்துச்சி.

அதுல நீ ரொம்ப தப்பு பண்ணிட்ட கங்கா.
நீ ராஜாவை கல்யாணம் பண்ணுணதே பெரிய தப்பு அப்படி இருக்கும் போது அவன் கூட ரொமான்ஸ் பண்ணி என்னோட கோவத்தை கிளறி விட்டுட்ட அவனை விட்டு போய்டு இல்லன்னா அவனை அழிச்சிடுவேன்னு மிரட்டி இருந்தாங்க. எனக்கு அதை படிச்சதும் உடம்பு நடுங்கி போய்டுச்சு.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Tempat cerita menjadi hidup. Temukan sekarang