ரணம் 1

833 9 1
                                    

ஓங்கி கம்பீரமாக ஒலித்தது  ராஜேஸ்வரி குரல்.இதுவரைக்கும் உங்களை விட்டு வச்சதே தப்பு. இதுக்கு மேல என் பேச்சை மீற பாக்குறீயோ?. உன்னை வெளிய படிக்க அனுப்பவே கூடாதுன்னு சொன்னேன். ஆனா அப்போ ஏதேதோ சொல்லி எல்லாரும் என் மனசை மாத்தீட்டீங்க.

இப்போ தீர்மானமா சொல்லுற இவ இனி என் வீட்டு வாசலை தாண்டி போக கூடாது. இருக்க இடம் கிடையாது, பிழைக்க வழி கிடையாது, கேக்க நாதி கிடையாது உங்களுக்கு எதுக்கு படிப்பு?, வேலை? எல்லாம்.

தகுதிக்கு மீறி ஆசை படுறீங்களோ?. ரொம்ப ஆடாதீங்க கடவுள் கால ஒடச்சி வச்சிடுவாரு. பொட்ட கழுதைகளுக்கு திமிர பாரு.வெளியே போர்ட்டிகோவில் நடுநாயகமாக பிரமாண்ட ஊஞ்சலில் அமர்ந்து ஆடி கொண்டே பேசிக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.

இவர் திட்டுவது அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பஞ்சமியையும்,அவர் மகள் சிவ கங்காவையும் தான். தாயும், மகளும் அப்படி ஒன்றும் பெரிய தவறு செய்து திட்டு வாங்கவில்லை. தன் மகள் படித்த படிப்புக்கு வேலைக்கு செல்ல அனுமதி கேட்டு ராஜேஸ்வரி முன்பு நின்று திட்டு வாங்கி கொண்டிருந்தனர்.

சுற்றி நின்ற அனைவரும் இருவரையும் ஐயோ பாவம் என்பது போல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். சிலர் இதுங்களுக்கு இது தேவை தான் என்பது போல் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.

இராஜேஸ்வரி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தனர் தவிர எதுவும் வாய் திறந்து பேசவில்லை பேசும் துணிவும் இல்லை அவர்களுக்கு.

இராஜேஸ்வரி மாளிகையில் ராஜேஸ்வரி வச்சது மட்டும் தான் சட்டம். அவரை மீறி யார் எதை செய்தாலும் தண்டனை நிச்சயம்.

இன்று அவர் பேச்சை மீறவே தாயும், மகளும் வந்து நிற்கின்றனர். அதுவும் இருவருக்கும் வீட்டுக்குள் வர அனுமதி கிடையாது. வீட்டு வாசலில் நின்று தான்
திட்டு வாங்கி கொண்டிருந்தனர்.

நான் தான் என்னோட முடிவை சொல்லிட்டேன் அப்பறம் எதுக்கு ரெண்டு பேரும் மரம் மாதிரி என் முன்னாடி நிக்கிறீங்க. போங்க போய் மாட்டு கொட்டாய சுத்தம் பண்ணுங்க என விரட்டினார்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Onde histórias criam vida. Descubra agora