ரணம் 18

331 7 0
                                    

செந்தில் எல்லாமே நான் நினைச்ச மாதிரி போகுது அடுத்து நம்ப ஒன்னும் செய்ய வேண்டாம் தானாவே எல்லாம் நடக்கும். நம்ப பண்ணுன எதுவும் இதுவரைக்கும் யாரும் கண்டு பிடிக்கல இனியும் கண்டு பிடிக்க கூடாது என்றவன்
எல்லாத்தையும் இன்னும் கொஞ்ச நாளைக்கு நீயே பாத்துக்கோ அதுக்கப்பறம் நானே சொல்லுறேன்.

பொறுப்பு எல்லாத்தையும் ஏத்துகுறேன்
இனி சென்னை போக வேண்டாம் திருச்சிலயே இருங்க. வசந்த் கிட்ட சொல்லி அவனையும் குடும்பத்தோட திருச்சிக்கு வர சொல்லு சென்னைல இருக்க வேலை எல்லாம் வேற ஒருத்தர் பார்த்துப்பார் என்றவன் அழைப்பை துண்டித்து தான் அமர்ந்து இருந்த மாமரத்தை வெறித்துக் கொண்டு இருந்தான் ராஜா.

இதுவரைக்கும் நான் பண்ணுன எல்லாத்துக்கும் நீ தான் காரணம் இனி நான் பண்ண போறதுக்கும் நீ மட்டும் தான் காரணம் என்றவன் மனதில் பல நினைவுகள் ஓடியது.

அதே மரத்தில் சாய்ந்து கண் மூடி அமர்ந்தவன் உதட்டில் அவனை அறியாமல் புன்னகை தோன்றி மறைய உதடுகள் அவன் அனுமதி இல்லாமலே முணு முணுத்தது பஞ்சுமிட்டாய் என்று.

அந்த பேரை சொல்லும் போதே ராஜா முகத்தில் அத்தனை பரவசம்  உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறேன் நீ என் கிட்ட எனக்காக மட்டும் வந்துடு என்றவன் வார்த்தைகளில் உள்ள வலியை அவன் மட்டுமே அறிவான். யார் அந்த பஞ்சுமிட்டாய் அங்கு கிறுக்க பட்டிருக்கும் பெயர் யாருடையது ஆனால் அதிலும் அடித்து கிறுக்கி அதன் கீழ் பஞ்சுமிட்டாய் என்றே செதுக்கி இருந்தது.

ராஜா கொஞ்ச நேரம் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தவன் மாந்தோப்பிலும், கரும்பு தோட்டத்திலும் வேலைகள் கிடப்பதை உணர்ந்து வேலையை பார்க்க சென்று விட்டான்.

ராஜா சாப்பிடாமல் இருப்பதை யாருமே உணர வில்லை பசி எடுத்தாலும் ஏனோ
சாப்பிட விருப்பம் இல்லை. பசியே வெறுத்து போகும் அளவு மாடு போல் வரப்பு வெட்டிக் கொண்டிருந்தான். ராஜாவுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது தன் பசியை மறக்கவே இப்போது வேலை செய்கிறான்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Where stories live. Discover now