இராஜேஸ்வரி தன் இரண்டு பேர பிள்ளைகளும் கங்காவுடன் நெருக்கமாக இருப்பது பிடிக்காமல் ராஜாவை கங்காக்கு எதிராக திருப்பி விட துவங்கினார்.
ராஜா மனதில் நஞ்சை விதைத்து கங்காவை கொடுமை படுத்த தூண்டி விட்டார்.ராஜா நீங்க தான் வீட்டுக்கு மூத்தவங்க இந்த குடும்பத்தை ஆள போறவங்க உங்களுக்கு பின்னாடி பிறந்தவங்களுக்கு நல்லது கெட்டது சொல்லி தரணும்.
அந்த கங்காக்கு அப்பா யாருன்னே தெரியாது அவ பிறப்பே ஒரு அசிங்கம் அப்படி பட்டவளை வீட்டுக்குள்ள சேர்க்க கூடாதுன்னு எத்தனை முறை உங்க அம்மாகிட்ட சொன்னாலும் பேச்சிக்கு புரியவே மாட்டேங்குது. பேச்சி ரொம்ப தங்கமானவ அதான் எல்லாரையும் சாதாரணமா நம்பிடுறா நீங்க தான் அம்மாக்கு எடுத்து சொல்லணும்.
கங்கா தப்பானவள் அவள் அம்மா மாதிரி தானே இவளும் இருப்பா நம்ப குடும்பத்துக்கு தனி மரியாதை இருக்கு அது கெட்டு போக கூடாது என்று அழுத்தமாக சொல்லி கொடுக்க ராஜா அமைதியாக ஊஞ்சலில் அமர்ந்து காதில் வாங்கி கொண்டான்.
அன்று மாலையே நகுலன், ரியா இருவரும் கங்காவை வீட்டுக்கு அழைத்து வந்து விளையாட துவங்க கொஞ்ச நேரத்தில் நகுலன் கங்காவை பிடித்து இழுத்ததில் அவள் அணிந்திருந்த பழைய சட்டை கிழிந்து போனது நகுலன் பதறி
சாரி கங்கா என்றவன் அவனே அவளுக்கு சட்டையை கழட்டி விட அதே நேரம் மாடியில் இருந்து இறங்கி வந்த ராஜா கண்ணில் அந்த காட்சி பட்டது.நகுலா நீ என்ன வேலை செய்ற உனக்கு தான் அவ வேலை செய்யணும் நீ அவளுக்கு வேலை செய்ய கூடாது. அவ தான் நம்ப வீட்டு வேலைகாரி மகள் என்றவன் கங்காவை பார்த்து சத்தமாக வீட்ட விட்டு வெளிய போ. உனக்கு வீடு இல்ல இங்கேயே சுத்திட்டு இருக்க என்று அதட்டவும் கங்கா பயந்து போனாள் அழுதபடி அங்கிருந்து ஓடி தன் அன்னையை கட்டி கொண்டு நடந்ததை கூற பஞ்சமி எதிர் பார்த்தது தான் என்பது போல தன் மகள் கண்ணீரை துடைத்து விட்டு நீ அந்த வீட்டுக்கு போகாத டா கங்கா பெரியவரு அவுங்க பாட்டி குணம் நகுலன் தம்பி மாதிரி கிடையாது.
ESTÁS LEYENDO
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?