கங்கா எந்த முக சுழிப்பும் தயக்கமும் இல்லாமல் ராஜா தட்டில் சாப்பிட துவங்கினாள். ராஜாக்கு கண் கலங்கியது அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவன் முகத்தில் உள்ள இறுக்கம் மறைத்தது.
கங்கா சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே மற்றவர் இருப்பதை பற்றி கவலை படாமல் அவள் சாப்பிடும் உணவை நின்றபடி ராஜாவும் அள்ளி சாப்பிட துவங்கினான். நந்தன், பிரியா இருவரும்
விழி விரித்து என்ன டா நடக்குது இங்க என்பது போல் பார்த்துக் கொண்டிருக்க
ராஜேஸ்வரிக்கு செருப்பால் அடித்தது போல் ஆகிவிட்டது.தன் பேரனை எச்சில் சாப்பிட வைத்து விட்டாளே என்ற கோவத்தில் தான் இப்போது எல்லார் முன்னாடியும் கங்காவை ராஜா சாப்பிட்ட எச்சில் தட்டில் சாப்பிட வைத்தார். கங்கா சாப்பிடும் போது அவளை பழிவாங்கிய சந்தோஷம் அவள் எச்சில் செய்த உணவை ராஜா சாப்பிட்டதும் காணாமல் போனது.
முகம் கோவத்தை தத்தெடுத்தாலும் அங்கு ராஜேஸ்வரி எதுவும் செய்ய முடியாது. காரணம் ராஜா இருப்பதாலும்
அவனே விரும்பி சாப்பிடுவதாலும் பாதி சாப்பாட்டில் தட்டை ராஜேஸ்வரி தள்ளி விடவும் அனைவரும் எழுந்து நிற்க்க எழ போன கங்காவை அமர வைத்தவன் நீ சாப்பிட்டு முடிச்சிட்டு எழுந்தா போதும்.பாட்டிக்கு போதும்னு எழுந்துட்டாங்க நீ சாப்பிடு என்றவன் அவன் குடும்பத்தில் உள்ளவர்களையும் அமர சொல்லி சாப்பிட சொல்லிவிட்டு அங்கிருந்து தன் அறை நோக்கி சென்றான்.
கங்கா சாப்பிட்டு முடித்ததும் அறைக்கு செல்லாமல் வெளியே சென்றவள் தங்கள் குடிசை இருந்த இடத்தை நின்று பார்த்து விட்டு வேப்ப மரத்துக்கு அடியில் எதோ யோசனையாக அமர்ந்தாள்.
கங்காவை தேடிய நந்தனும், பிரியாவும்
கங்கா மரத்தடியில் அமர்ந்து இருப்பதை பார்த்து அவளை நோக்கி சென்றனர்.தன் நண்பர்கள் வந்ததை கூட அறியாமல்
எங்கேயோ வெறித்து பார்த்தபடி சிந்தனையில் இருப்பவளை பிரியாவின் குரல் கலைத்தது. கங்கா என்றழைத்த படி அவள் கன்னத்தை கில்லிய பிரியாவை பார்த்து மெலிதாக சிரித்தாள் கங்கா.பிரியாவும், நந்தனும் கங்காவின் இருபுறமும் அமர்ந்தனர். முதலில் நந்தன்
பேச்சை துவங்கினான்.
VOCÊ ESTÁ LENDO
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?