ரணம் 40

317 7 1
                                    

கங்கா அதிர்ச்சி தாங்க முடியாமல் அப்படியே மடங்கி அமர்ந்தவள் கண் கூட சிமிட்டாது சிலை போல் இருந்தாள்.
கங்காவின் நிலை அறிந்தாலும் இன்றுடன் அனைத்தையும் முடித்துக் கொள்ள வேண்டும் இனி இது தொடர கூடாது என்று அவளை தேற்றி சமாதானம் செய்து சமரசம் செய்யாமல்
நான் சொல்லுறது உனக்கு பேரதிர்ச்சியா இருக்கும் தான் கங்கா ஆனா நான் சொல்லுறது தான் உண்மை.

எனக்கு ராஜாவை காப்பாத்த அப்போ அந்த வழி மட்டும் தான் கிடச்சிது. உங்க கல்யாணம் சட்டபூர்வமாக ஆன பிறகு தான் ராஜா வாழனும் ஆசை பட்டு வாழ்ந்தான்.

உன்னோட நிழல் கூட உனக்கு எவளோ துணையா இருந்துதுன்னு எனக்கு தெரிய கங்கா ஆனா ராஜா உன் நிழலை விட அதிகமா உன்னையே சுத்தி சுத்தி வந்தான். உன்னோட அசைவுக்கு கூட அர்த்தம் சொல்லுவான்.

உன்னோட 12த் மார்க் கூட ராஜா தான் முதல பார்த்தான் அவன் தான் என்கிட்டையே சொன்னான் அதன் பிறகு தான் நானே உன் கிட்ட சொன்னேன்.
உன்ன எனக்கு எப்படி தெரியும் ராஜா மூலமா தான் உன்னை தெரிஞ்சுகிட்டேன்
கங்கா.

நீ பத்தாவது படிக்கும் போது என் கிட்ட வந்தான் ராஜா. நான் யார் தெரியுமா
என்னால முடிஞ்ச உதவியை மறைமுகமாக செஞ்சி ஒரு நான்கு குழந்தைகளை படிக்க வைக்கிறேன் என்ன பத்தி யாருக்குமே தெரியாது அவன் எப்படி என்னை கண்டு பிடிச்சு வந்தான்னு தெரியல.

இப்பவும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு உன்னோட படிப்புக்காக வந்தான்.
ஆனா செலவு முழுக்க அவன் தான் பாத்துகிட்டான். உனக்கு பதினொன்னாவது நல்ல ஸ்கூல்ல சீட் கிடச்சுதே எப்படி உன்னோட மார்க் மட்டும் வச்சி கிடைக்கல அங்க எல்லாம் பணத்தை வாரி இரைக்கணும் கங்கா ராஜா தான் பணம் கட்டி சேர்த்து விட்டான். அவன் பணத்தை என் கிட்ட கொடுப்பான்
அதை நான் ஸ்கூல்ல கட்டிடுவேன்.

அதே மாதிரி தான் காலேஜ்ல உனக்கு முதல ஃப்ரீ சீட் தான் அந்த காலேஜ் முடிவு பண்ணி இருந்தாங்க அதுக்குள்ள உனக்கு கொடுக்க வேண்டிய சீட்க்கு போட்டி அதிகமா ஆகிடுச்சு நான் நீன்னு போட்டி போட்டு பணம் கட்ட தயாரா இருந்தாங்க அப்போ ராஜா தான் அவுங்க சொன்ன பணத்துக்கு மேல அதிகமா பணம் கட்டி சீட் வாங்கினான்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Donde viven las historias. Descúbrelo ahora