ரணம் 30

26 2 0
                                    

ரியா, நகுலன் இருவரும் தன் அண்ணன் நிலை கண்டு வாய் மூடி அழுதனர்.
ரியாக்கு தன் அண்ணன் கங்காவை காதலிப்பதாக நீண்ட வருடங்களாக சந்தேகம் உண்டு அதை உறுதி செய்ய முடியாமல் தவித்தாள். இப்போது உண்மை தெரிந்தும் மகிழ முடியவில்லை அண்ணன் நிலை கண்டு.

கங்காவை காக்க வேண்டிய அனைவரும் தோப்பு வீட்டில் இருக்க கங்கா தனியாக மாட்டிக் கொண்டாள் ராஜேஸ்வரி கூட்டத்திடம். ராஜாவை பற்றி யோசித்தபடி வந்தவளை முறைத்தபடி வந்து நின்றனர். ராஜேஸ்வரி, கணபதி,சாரு,பல்லவன் அனைவரும். பேச்சியையும், சந்திரனையும் கோவிலுக்கு அனுப்பி வைத்து விட்டனர் திட்டம் போட்டு.

ராஜா எங்கு சென்றான், எப்போது வருவான் என்று தெரியாத போதே கங்காவை வீட்டை விட்டு அடித்து துரத்தி
விட்டு யாருடனே ஓடி போய்விட்டதாக
கதை கட்டி ராஜாவையும் நம்ப வைக்க திட்டம் தீட்டினர்.

அவர்கள் திட்டத்திற்கு ஏற்ப்ப நகுலன்,
ரியா இருவருமே வீட்டில் இல்லை வீட்டில் இருந்த பேச்சியையும் அனுப்பி விட்டுவிட்டு காத்திருந்தனர் கங்காவுக்காக. தனியாக வந்து சிக்கி கொண்டாள் சரியான நேரத்தில்.

கங்கா வாசலில் நிர்ப்பவர்களை பார்த்ததுமே கண்டு கொண்டாள் எதோ செய்ய போகிறார்கள் என்று. அவர்களை கடந்து உள்ள போக நினைத்தவளை சாரு இழுத்து வெளியே நிறுத்தியவள் இது தாண்டி உன்னோட தகுதி கொஞ்ச நாள் வீட்டுக்குள்ள இருந்தா நீ வீட்டுக்கு எஜமானி ஆகிடுவியோ இன்னையோடு
உன்னோட கொட்டத்தை அடக்ககுறேன்.

இனி உனக்கு இந்த வீட்டுல இடம் கிடையாது மரியாதையா அடி வாங்கி அசிங்க படாம நீயே வீட்டை விட்டு ஓடி போய்டு இல்லன்னா உன்னை அடிச்சி துரத்தி விட்டுடுவோம் என்று ஆக்ரோஷமாக கத்தினாள் சாருமதி.

கங்கா அதிராமல் அப்படியே நின்றவள்
என்னோட புருஷன் வந்து சொல்லட்டும் அதுக்கப்பறம் நானே போறேன்.இப்போ
நான் வீட்டை விட்டு போனா நான் யார் கூடவோ ஓடி போய்ட்டதா கதை கட்டி விட்டுடுவீங்க அதனால அடிச்சே கொன்னாலும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று நிமிர்ந்து நேராக அதே இடத்தில் நின்றாள்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Onde histórias criam vida. Descubra agora