ரணம் 10

329 6 0
                                    

கல்யாண வேலை படு ஜோராக நடந்தது. யாருமே எதிர்பார்க்கவில்லை இத்தனை வேகமாக எல்லாத்தையும் தயார் செய்ய முடியும் என்று.ராஜேஸ்வரி பிடிவாதமாக ஊருக்குள் இருந்து ஒருவரையும் உதவிக்கு அழைக்கவில்லை.

வெளி ஊர் ஆட்க்களை வைத்து அனைத்து வேலைகளையும் மிக நேர்த்தியாக அதே சமயம் ஆடம்பரமாக செய்து விட்டார். ஊர் முழுவதும் தோரணம் விளக்கு அலங்காரம் செய்ய பட்டது.

வண்ண வண்ண விளக்குகள் வீடு முழுவதும் மின்னியது.விருந்தினர்கள் வந்து தங்க அவர்கள் மாந்தோப்பில் தனியாக இடம் ஏற்பாடு செய்ய பட்டது.

ஏனோ பேச்சிக்கு மூச்சு முட்டியது இத்தனை ஆடம்பரத்தில். அதை விட கவலை தன் மகன் திருமணத்திற்கு ஊரில் இருந்து மக்கள் யாருமே வராமல் போய் விடுவார்களோ என்ற பயம். ராஜகுருக்கு நலுங்க வைக்க அழைத்த போதே ஊருக்குள் இருந்து யாருமே வர வில்லை.

சமைத்த உணவுகள் எல்லாமே வீணாகி போனது. யாரும் வராததை கண்ட ராஜா கோவத்தோடு அங்கிருந்து எழுந்து சென்றான்.

ராஜாவின் நண்பர்கள் தான் அவனை சமாதானம் செய்து அமர வைத்து நெருங்கிய சொந்தங்கள் மட்டும் நலுங்கு வைத்தனர்.

சாருமதி கனவு கோட்டை பல அடுக்கடுக்காக கட்டி சிறகில்லாமல் வானில் பறந்து கொண்டிருந்தாள் கல்யாண கனவில்.

சிறுவயதில் இருந்து ராஜா மீது ஆசை. தன்னுடைய பல வருட ஆசை நிறைவேற போகும் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்து கொண்டிருந்தாள்.

சாருமதியை கையில் பிடிக்கவே முடியவில்லை. வீட்டின் கொத்து சாவி தன் கைக்கு வர போகும் நாளை நினைத்து இப்போதே கனவு காண துவங்கி விட்டாள்.

இவளை விட ஒரு படி மேல் எதோ அரும்பகோட்டைக்கு தானே தலைவர் என்பது போலவே நடந்து கொண்டார் பல்லவன்.

ஒவ்வொருவரின் ஆட்டத்தை அடக்கவே ராஜகுரு இருப்பது தெரியாமல் தலைக் கணம் பிடித்து ஆடுகின்றனர்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Where stories live. Discover now