ரணம் 77

1.1K 7 8
                                    

வீட்டில் இருக்கும் ஊஞ்சலில் கூட இதுவரை கங்கா அமர்ந்தது கிடையாது. ராஜாவும் அதில் அமருவது இல்லை.
கங்காக்கு ஊஞ்சல் பிடிக்கும் என்பது தெரிந்தும் இது வரை ராஜா அமர சொல்லியதும் இல்லை.

இன்று தனியாக ஊஞ்சல் தனக்காக கட்டி அவனே ஆட்டி விடும் போது எவ்வளவு மகிழ்வாக இருக்கும். அவள் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தோட்டத்தில் பறித்து வைத்திருந்த சாமந்தி பூக்களை கை நிறைய அள்ளி கங்கா மேல் தூவினான்.

தன் மேல் விழுந்த பூக்களை கண்டு சந்தோஷத்தில் சத்தம் போட்டு சிரித்தாள் சில்லறை சிதற விட்டது போல. அவளுக்கு உண்மையில் மனம் குளிர்ந்தது போல் உணர்வு.

திரும்பி ராஜா முகம் பார்க்க அவனுமே அவள் சிரிப்பில் மெய் மறந்து நின்று இருந்தான். கங்காவின் சிரிப்புக்கு போட்டியாக அவளின் மூக்குத்தி மின்ன அவளின் அழகு கூடி போனது போன்ற உணர்வு.

கங்கா ராஜாவை நோக்கி கை நீட்டி அழைக்க ராஜாவும் அவளுடன் அமர்ந்து கொண்டான். இருவரும் சேர்ந்து ஆடி தங்களின் தனிமையான நேரத்தை அழகாக செலவு செய்தனர்.

பிரியா வெளியே இருந்த படிக்கட்டில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருக்க நகுலன் ஊஞ்சலில் அமர்ந்து இருந்தான்.

நகுலனுக்கு திடீர் என்று ஒரு எண்ணம் தோன்ற ஊஞ்சலை காலில் உதைத்து வேகமாக ஆட துவங்க பிரியா மேல் மோதுவது போல் வந்து போனான். சில நிமிடங்கள் வரை பிரியா எதார்த்தமாக நடப்பதாக நினைத்துக் கொள்ள மீண்டும் மீண்டும் தன்னை உரசுவது போல் வந்து செல்லவும் திரும்பி பார்த்தவள் பத்திர காலியாக மாறி போனாள்.

நகுலன் பிரியாவை பார்த்து நக்கலாக சிரித்தபடி ஆடிக் கொண்டு இருக்கவும் அவன் வேண்டும் என்றே செய்வதாக தோன்றியது அவளுக்கு தன் கையில் இருந்த டீ கப்பை நகுலன் மேல் வீச ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்தான் நகுலன்.

இன்னைக்கு உன்ன விட மாட்ட டா கத்திய படி நகுலனை துரத்த நகுலன் பிரியாக்கு போக்கு காட்டிக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தவன் கீழே கிடந்த துடப்பம் தடுக்கி விழ போக அவன் சட்டை காலரை பிடித்தவள் அவனுடன் சேர்ந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தாள்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Where stories live. Discover now