ராஜேஸ்வரி மின்சாரம் தாக்கி கை கால்களை இழுத்துக் கொண்டு வாயில்
இருந்து எச்சில் ஊத்த கிடந்தார். இருவரும் உள்ளே போக முடியாத படி ஒயர் வாசலில் கிடக்க அதற்குள் மொத்த குடும்பமும் ராஜேஸ்வரி சத்தம் கேட்டு ஓடிவந்து விட்டது.நந்தன் நகுலனை பார்த்ததும் நான் போய் மெயின் நிறுத்துறேன் நீங்க போய் உங்க பாட்டியை தூக்குங்க அதுவரைக்கும் யாரும் போக வேண்டாம் என்று கத்தியபடி ஓடியவன் வீடு முழுவதும் மின்சாரத்தை துண்டிக்க நகுலன், சந்திரன் இருவரும் ராஜேஸ்வரியை தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
மொத்த குடும்பமும் வாசலில் நிற்க்க ராஜேஸ்வரி ஒரு இடத்தை காட்டி விரல் நீட்டிக் கொண்டே இருந்தார் அங்கு சுற்றி இருந்தவர்கள் யாரும் பதட்டதிலும் கண்ணீரிலும் அதை கொஞ்சமும் கவனிக்க வில்லை.
அவர் தலையை தூக்கி எதோ காட்ட வர அதற்குள் மயங்கி விழ அனைவரும் அழுத படி கேகே ஹாஸ்பிட்டல் கிளம்ப
நந்தன் பிரியாவை அழைத்து பிரியா நீ ரியா, ரியா அம்மாவை பாத்துக்க இந்த நேரத்துல எல்லாரும் ஹாஸ்பிட்டல் போக வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றனர்.என்ன தான் மொத்த குடும்பமே மருத்துவராக இருந்தாலும்,சொந்தமாக ஹாஸ்பிட்டல் வைத்து இருந்தாலும் விதியை மாற்ற இயலாது.
பேச்சி விடாது தன் மகனுக்கு அழைத்து பார்க்க ராஜாவோ யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க தன்னுடைய போனையும், கங்கா போனையும் ஸ்வீட் ஆப் செய்து வைத்து இருந்தான்.
வீட்டில் நடப்பது எதுவும் தெரியாமல் நிம்மதியாக தன் பஞ்சுமிட்டாயை அணைத்து தூங்கிக் கொண்டிருந்தான்.
ஹாஸ்பிட்டலில் இருந்த மற்ற டாக்டர்ஸ் வைத்து தங்களால் முடிந்த முயற்சியை செய்தும் ராஜேஸ்வரி உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அவர் கை ,கால் அசைவு இல்லாமல் போனதோடு தெளிவாக பேச முடியவில்லை.
மின்சாரம் தாக்கியதால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவரை படுத்த படுக்கையாக மாற்றி விட்டது. கங்காவை மின்சாரம் வைத்து கொல்ல நினைத்தவருக்கு அதே மின்சாரத்தால் தண்டனை கிடைத்து விட்டது. என்ன வித்தியாசம் சாகவில்லை சாவை விட கொடுமையான தண்டனை மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழவே முடியாது இனி.
KAMU SEDANG MEMBACA
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romansaதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?