ரணம் 55

296 6 0
                                    

நந்தன், ராஜா இருவரும் எதோ பேசிக் கொண்டிருக்க அவர்கள் இருவரையும் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த உருவம் தனக்குள் கூறி கொண்டது அடுத்தது நீ தான் ராஜா உன்னை அழிச்சிட்டா எனக்கு இருக்க வழி எல்லாம்
கிளியர் ஆகிடும். அதுக்கு அப்பறம் கங்காவை இங்கேந்து அழச்சிட்டு போய்டுவேன் உனக்கு மரணத்தை எப்படி, எங்க குடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் என்று சிரித்த உருவம் மற்றவர்கள் கவனிக்கும் முன்பு மறைந்து போனது.

ராஜா என்ன தான் நந்தன் சொல்வதை கேட்டு கொண்டிருந்தாலும் அவன் உள்ளுணர்வு அடித்து கூறியது தன்னை யாரோ கண் கானிப்பதை. அவனும் டீ குடிப்பது போல் நடித்தபடி சுற்றிலும் சாதாரணமாக பார்ப்பது போல் பார்வையை சுழல விட்டு தேடி பார்த்தான்
எதுவும் தெரியவில்லை. அவனுக்கு கங்கா நியாபகம் வர உடனே நந்தனை அழைத்துக் கொண்டு வாங்கிய டீயை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடியவனுக்கு சுவற்றில் சாய்ந்து நிற்க்கும் கங்காவை கண்ட பின்பு தான் உயிர் வந்தது.

ராஜா முகத்தில் தெரிந்த பதட்டத்தை கண்ட நந்தன் ராஜா எதாவது நீ என்கிட்ட மறைக்கிறியா? என்று சந்தேகமாக கேட்க
ராஜா மூச்சை நன்றாக இழுத்து விட்ட படி
நந்து எனக்கு கொஞ்ச நாளா யாரோ நம்பளை கண் கானிக்கிற மாதிரி தோணுது. அது வெறும் கற்பனையாக நினைக்கவும் முடியல யாருன்னு கண்டு பிடிக்கவும் முடியல என்று சொல்லவும்
ஆமா ராஜா எனக்கும் இதே உணர்வு தான் இருக்கு. கங்காவை மிரட்டி லட்டர் வந்ததுலேந்து எனக்கு அப்படி தான் தோணுது.

வெளிய சொல்லி யாரையும் பயமுறுத்த வேண்டாம்னு தான் அமைதியா இருந்த நானாவே கண்டு பிடிக்க முயற்சி பண்ணுற முடியல ஒரே குழப்பமா இருக்கு.

இருவரும் பேசிய படி கங்கா அருகில் வந்து நிற்க்க ராஜா கங்கா கையை பிடித்து அதில் டீ கப்பை வைத்து சூடா குடி சிவா ராத்திரிலேந்து நீ எதுவுமே சாப்டல இதை குடி கொஞ்ச நேரத்துல நீ எல்லாரையும் அழச்சிட்டு வீட்டுக்கு போ என்றான்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Donde viven las historias. Descúbrelo ahora