ரணம் 51

298 6 0
                                    

டேய் எச்சை நாயே இங்க வாடா என்று கத்திய படி வாழை தோப்புக்குள் வரும் ராஜாவை கண்ட ஒருவன் தலை தெறிக்க தப்பித்து ஓட பார்த்தான்.

ஓட முயன்றவனை வளைத்து பிடித்த நகுலன் அவனின் இரு கையையும் பின் புறம் மடக்கி அவன் துண்டால் கட்டி முதுகில் எட்டி உதைக்க ஓடி வந்த ராஜா காலில் சென்று விழுந்தான்.

சாப்பிட இலை அறுக்க வந்த ராஜா கண்ணில் சிக்கினான் வாழை தோப்புக்குள் மறைந்து இருவரையும் வேவு பார்த்துக் கொண்டிருந்தவன். உடனே ஓடி அவனை பிடிக்க நினைத்த கால் இரண்டையும் அடக்கியவன் கங்கா தனக்காக காத்திருப்பது உணர்ந்து அவள் இருக்கும் போது எதுவும் வேண்டாம் என்று நகுலனுக்கு ஒரு மெசேஜ் தட்டி விட்டுவிட்டு தன் சிவாவை கொஞ்ச துவங்கினான்.

சிவா அவன் மடியில் இருந்து எழுந்து ஓடியவளை வளைத்து பிடித்து தனக்குள் அடக்கி கொள்ள எவ்வளவு நேரம் ஆகி விடும் ராஜாவாகவே அவளை விட்டு விட்டான்.

கங்கா கண்ணில் இருந்து மறையும் வரை காத்திருந்தவன் அவள் மறைந்ததும் பாயும் புலியாக பாய்ந்து ஓடினான்.

தன் காலில் வந்து விழுந்தவனை இருவருக்குமே அடையாளம் தெரியவில்லை.

ராஜா கீழே கிடந்தவனை தூக்கி நிறுத்தியவன் யார் டா நீ எதுக்கு எங்களை வேவு பாத்த சொல்லு என்று சட்டையை பிடித்து உலுக்க அவன் வாயை திறக்கவே இல்லை.

நகுலன் பொருமை இல்லாமல் அவன் மூக்கில் குத்த கத்திய படி தன் மூக்கை பிடித்து கொண்டவன் நான் உங்களை வேவு பாக்கல என்றான்.

ராஜா குழப்பமாக எங்களை பாக்கலனா அப்போ எதுக்கு வாழை தோப்புகுள்ள மறைந்து இருந்த. மீண்டும் நகுலன் பலமாக கன்னத்தில் குத்த கன்னம் வீங்கி போனது. அண்ணா இருண்ணா என்ற நகுலன் வேவு பார்த்தவனை அடி துவைத்து விட்டான்.

இதற்கு மேல் அடி வாங்கினால் கட்டாயம் செத்து விடுவோம் என்பதை உணர்ந்து கொண்டவன் நான் சொல்லிடுறேன் சொல்லிடுறேன் என்ன விட்டுடுங்க தயவு செஞ்சி என்ன விட்டுடுங்க. நான் புள்ள குட்டி காரன் என்று அழுது கெஞ்சவும் நகுலன் அவனை அடிப்பதை நிறுத்தினான்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Where stories live. Discover now