சாரு நகுலன் வார்த்தையை கேட்டு கொதித்தெழுந்தாள் உன் அண்ணனை குறை கூடாதுன்னு சொல்லுறது சரி தான் இப்போ என் வாழ்க்கைக்கு என்ன பதில் நேத்து வரைக்கும் நம்ப வீட்டு அடிமையா இருந்தவளை அண்ணனும் தம்பியும் தலைல தூக்கி வச்சி ஆடுறீங்க.
அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் அவ வசியம் வச்சா ஒரே ராத்திரியில் என்ற வார்த்தையை முடிவுக்கும் முன்பு வாங்கிய அறையால் வாய்க்குள் இருந்து இரத்தம் வந்ததோடு சுற்றி தன் தந்தை அருகில் சென்று கீழே விழுந்தாள்.
எல்லோரும் நடுங்கிய படி பார்க்க ராஜா ருத்திரமூர்த்தியாக நின்றிருந்தான் ருத்திரா தாண்டவம் ஆட. சாரு கன்னம் பண்ணு போல் வீங்கியது ஒரு அறைக்கே. பல்லவன் ராஜாவை திட்ட வாய் திறக்கும் முன்பே ஒரு விரலை உதட்டில் வைத்து வாயை மூட சொன்னான் ராஜா.
ராஜா முகம் கோவத்தில் சிவந்திருப்பதை கண்டு பல்லவன் வாய் திறக்க வில்லை.
தன் உதட்டில் இருந்து விரலை எடுத்தவன் சாருமதி முன்பு நீட்டி என் வாழ்க்கைல கல்யாணம் ஒருமுறை தான். அது யார்கூடவோ எப்படியோ நடந்து முடிந்து போச்சி. இனி யார் நினைத்தாலும் அதை மாத்த முடியாது.அதே சமயம் எனக்கு மனைவியா வந்தவளுக்கு மரியாதை குடுத்தே ஆகணும். நேத்து வரைக்கும் கங்கா என்ன நிலமைல இருந்து இருந்தாலும் இப்போ இந்த ராஜாவோட மனைவி அதை மட்டும் மனசுல ஆழமா பதிய வச்சிக்க.
உன் மேல தப்பு இல்ல தான் அதுக்காக நடந்த கல்யாணத்தை மாத்த முடியாது. உனக்கு நானே நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றவன் அதற்க்கு மேல் அங்கு நிற்காமல் மாடி ஏறினான். தன் முழு கோவத்தை தாங்கும் சக்தி இவர்களுக்கு இல்லை என்பதால்.
எல்லோரும் கம்பீரமாக செல்லும் ராஜாவையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பல்லவன் ராஜா சென்றதும் தன் மாமனாரிடம் வீரத்தை காட்டினார்.
மாமா எங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்க வக்கு இல்லாம நாங்க இல்ல. எங்க பொண்ணு கல்யாணத்தை நாங்களே பாத்துகுறோம் இனி உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது என்றதும் ராஜேஸ்வரி, கணபதி இருவரும் துடித்து விட்டனர்.
YOU ARE READING
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?