ரணம் 36

312 7 1
                                    

கங்கா வழமை போல் வேலைக்கு கிளம்பினாலும் காலை பூஜைக்கு தேவையாவற்றை அவளே எடுத்து வைத்து விடுவாள். அதே போல் எழுந்து குளித்து பூஜை அறையை சுத்தம் செய்து வைக்க ராஜா பூஜை செய்ய வந்தவன் கால்கள் படியில் அப்படியே நின்று விட்டது.

காலையில் தலைக்கு குளித்து மஞ்சள் புடவையில் மஞ்சள் பூசிய முகத்தோடு கழுத்தில் ராஜா கட்டிய மஞ்சள் தாலியோடு பூக்களை கூடையில் அடுக்கி கொண்டிருப்பவளின் மங்களகரமான அழகை கண்டு தான் மெய் மறந்து அப்படியே நின்று விட்டான்.

லைட் வெளிச்சத்தில் மஞ்சள் முகத்துக்கு போட்டியாக மின்னும் அவளின் மூக்குத்தியை ரசித்தவன் இதழ்கள் அவனை அறியாமல் புன்னகைத்தது.  இப்போது எல்லாம் காலை பூஜைக்கு யாரும் வருவது கிடையாது. கங்கா மட்டும் தான் இருப்பாள் அதனால் தன் மனைவியை ரசிப்பதற்கு தடை இல்லாமல் போனது ராஜாக்கு. மற்றவர்கள் இருந்தாலும் அவர்களை பற்றி யோசிக்கும் ரகம் இல்லையே ராஜா.

விழி அசைக்காது பூஜை அறை வரை வந்தவன் கங்கா முன்பு நின்று அவள் முகத்தை ரசித்தபடி இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க பஞ்சுமிட்டாய் என்றவனை
நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தவள் ராஜாவை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

ராஜா பூஜை அறைக்குள் கால் வைத்ததும் மற்றது மறந்து சிவனே ராஜா சிந்தனையை ஆட்க்கொண்டார். பக்த்தியுடன் பூஜை செய்தவன் கங்காவுக்கு பொட்டு வைத்து விட்டவன் நேரே சமையல் அறைக்கு சென்று ஃப்ரிட்ஜில் அம்மா கட்டி வைத்திருந்த மல்லி பூவை எடுத்து வந்து கங்காக்கு தானே பூ வைத்து விட்டான்.

தினமும் பூவும், பொட்டும் ராஜாவே தான் வைத்து விடுகிறான். அவளுக்கு பூ வைத்து விட்டவன் அவள் முகம் நிமிர்த்தி சில நிமிடங்கள் ஆசையாக பார்த்தவன் அவளின் அழகு முகத்தை மனதில் நிரப்பிக் கொண்டு நீ வேலைக்கு கிளம்பி இரு இன்னைக்கு நானே அழச்சிட்டு போறேன் என்றவன் தன் ஜீப்பில் வயலுக்கு கிளம்பினான்.

நகுலன் வேலை எதுவும் இல்லாததால் வெட்டியாக வீட்டை சுற்றிக் கொண்டிருக்க
அவன் பார்வை ஓரிடத்தில் கூர்மையானது அவன் பார்வை சென்ற திசையில் பிரியா சுற்று முற்றும் பார்த்தபடி நெல்லி செடிக்கு கீழ் எதையோ
குழி தோண்டி புதைத்து கொண்டிருந்தாள்
அவள் திருட்டு தனத்தை பார்த்தபடி அவள் அருகில் சத்தம் செய்யாமல் வந்தவன் பின்னால் இருந்து எட்டி பார்க்க ஒரு கிண்ணம் கேசரியை குழிக்குள் கொட்டி மண்ணை மேலே போட்டு மூடும் நேரம் பிரியா கை பிடித்து இழுத்தவன் ஏய் வாயாடி என்ன பண்ணுற எதுக்கு இவளோ கேசரிய கீழ போடுற மத்தவங்க சாப்பிட வேண்டாமா என்றவனை விழி விரித்து பார்த்து கொண்டிருந்தாள்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Tahanan ng mga kuwento. Tumuklas ngayon