கங்காவின் இறுக்கம் கூடிக் கொண்டே போனது. ராஜா தன்னுடைய இத்தனை வருட தவத்திற்கும், ஏக்கத்திற்க்கும்
அவள் எலும்புகள் உடைந்து போகும் அளவு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவன் கொடுக்கும் அழுத்தத்தில் அவளுக்கு வலி தெரியவில்லை.கங்கா கண்ணில் ஒரு தீவிரமும், எதோ முடிவும் தெரிய ஒரு முறை விழி மூடி திறந்தவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் ராஜா தோளில் விழுந்தது.
கங்கா மென்மையாக அழைத்தாள் குரு என்று அவளின் அழைப்பும், அவளின் மூச்சு காத்தும் சேர்த்து ராஜா உடலில் சிறு நடுக்கத்தை கொடுத்தது. கண் மூடி அனுபவித்தான் அவளின் ஸ்பரிசத்தை
கங்காவின் சூடான மூச்சு காற்றை.தன் வாழ்வில் நடக்கவே நடக்காதது என்று நினைத்த நிகழ்வு இப்போது
அவன் வாழ்வில் நடந்துக் கொண்டிருந்தது. அவனின் பஞ்சுமிட்டாய்
அவனை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டிருக்கிறாள்.அவனே அவளை விட நினைத்தாலும் கங்கா அவனை விடும் முடிவில் இல்லை.
ராஜாவின் கழுத்தில் மென்மையாக முத்தமிட புல்லரித்து போனது ராஜாக்கு. ராஜா கண்ணில் இருந்து கண்ணீர் இறங்கியது. ராஜா அவளை விலக்கி அவள் முகம் பார்த்தவன் விழிகள் அவளை அங்குலம் அங்குலமாக அளந்தது.
நடுங்கும் உதடுகளும், கலங்கிய விழியும்
விடாமல் பிடித்திருக்கும் உடலையும் தொட்டு தழுவி செல்லும் அங்கங்களும் ராஜாவுக்குள் உறங்கிய உணர்வுகளை தட்டி எழுப்பியது. அவனுக்கு இப்போதே அவளுடன் கலக்கும் எண்ணம் இல்லை அவனின் பஞ்சுமிட்டாய் உடன் பேச நிறைய விஷயங்கள் உண்டு அதை விட ஆசைகள் அலாதியாக இருக்கிறது அவனுக்கு அதனால் எழுந்த உணர்வுகளை அடக்க ராஜா போராடிக் கொண்டிருக்க அவன் போராட்டத்தை தவிடு பொடியாக்கினாள் அவனின் பஞ்சுமிட்டாய்.அவனுக்கு சேரும் எண்ணம் இல்லை என்றாலும் இன்றே அவனுக்கு தன்னை அர்ப்பணிக்கும் முடிவை அவள் கண் திறந்து அவன் முகத்தை முதல் முதலில் பார்த்த போதே எடுத்து விட்டாள்.
KAMU SEDANG MEMBACA
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romansaதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?