ரணம் 37

20 2 0
                                    

நந்தன், பிரியா இருவருக்கும் உச்ச கட்ட அதிர்ச்சி அவர்கள் ஒரு சதவிகிதம் கூட நம்பவில்லை ராஜா தான் கேகே என்பதை. ஆனால் இப்போது கண் முன்னே நடந்து வருகிறான். இவன் இல்லை வேறு ஒருவன் என்று செந்தில் சொல்ல மாட்டானா என்று செந்தில் முகத்தை எதிர் பார்ப்போடு பார்க்க அவர்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்குவது போல் செந்தில் ராஜாவை நோக்கி சென்றவன் கேகே எல்லாம் தயாரா இருக்கு என்றதும் சிறு தலையசைப்புடன் அங்கு திக் பிரமை பிடித்தது போல் நிற்க்கும் தன் மனைவியை கூட கண்டு கொள்ளாது ஒரு அறைக்குள் நுழைந்தவன் ஆப்ரேஷன் பண்ண தேவையான உடையுடன் வெளியே வந்தான்.

வேகமாக ஆப்ரேஷன் தியேட்டர்க்குள் நுழைந்தவனை இமைக்கு மறந்து பார்த்து கொண்டிருந்தவள் அருகில் வந்த பிரியா கங்கா கழுத்தை சுரண்டி என்ன டி எங்களுக்கு மேல அதிர்ச்சியாக பாக்குற
உனக்கும் தெரியாதா என்றாள். கங்கா
தெரியாது என்பது போல் தலை அசைத்தவள் ராஜா சென்ற திசையையே பார்த்து கொண்டிருக்க செந்தில் வேகமாக ஓடி வந்தவன் கங்கா வா நீ தானே அந்த சின்ன பையன் நிலமையை சரியா சொன்ன உன்னை கேகே கூப்பிடுறான் நீயும்  கேகே கூட சேர்ந்து ஆப்ரேஷன் பண்ணனும் என்றபடி கங்காவை அழைத்து சென்று விட்டவன் சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னான்.

வசந்த் சிறுவனின் குடும்பத்தை அமர வைத்து விட்டு மற்றொரு வேலையை பார்க்க சென்றான். நந்தன், பிரியா இருவரும் அதே இடத்தில் அசையாமல் நின்று இருந்தவர்களை செந்தில் அழைத்து சென்று நாற்காலியில் அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு உங்களுக்கு நிறைய விஷயங்கள் குழப்பமா தான் இருக்கும் நாங்க சொள்ளுறோம்.

இப்போ பேச நேரம் இல்லை அதுக்கான இடமும் இல்லை நீங்க நாளைக்கு பிரியாவை அழச்சிட்டு திருச்சில இருக்க கேகே ஹாஸ்பிட்டல் வந்துடுங்க. உங்க கிட்ட எதுக்கு சொல்லனும்னு முடிவு பண்ணினேன் தெரியுமா என்றதும் இருவரும் கேள்வியாக செந்திலை பார்த்தனர்.

நீங்க கங்கா நல்லா இருக்கணும்னு மனசார நினைக்கிறீங்க. அவ சந்தோஷத்தை முக்கியமா நினைக்கிறீங்க. அதுக்காக மட்டும் தான் உங்க கிட்ட உண்மைய சொல்லுறோம்.
நந்தன் பல சிந்தனைகளுடன் தலை அசைத்தவன் பிரியாவை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றான்.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Tempat cerita menjadi hidup. Temukan sekarang