விதுஷா, கங்கா இருவரும் உள்ளே தூக்கி சென்று இரண்டு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டனர். லாரா அங்கு இல்லை அவள் வேறொரு இடத்துக்கு சென்று இருந்தாள். அவளுக்கு நூறு சதவிகித நம்பிக்கை ஆப்ரேஷன் நல்ல படியாக முடிந்துவிடும். தன் மகள் பிழைத்து விடுவாள் என்று.
கங்காவின் இதயம் எடுக்க பட்டதும் அவள் இதயம் எடுக்க பட்ட பகுதியை மூடாமல் துணியில் சுற்றி கொண்டு போய் ராஜா வீட்டு வாசலில் போட சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.
அந்த அறை முழுவதும் மருத்துவ மனையாகவே மாற்ற பட்டு இருந்தது. அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்தும் அங்கு இருக்க கேகேவுக்கு அடுத்த இடத்தில் இருந்த மருத்துவர்கள் அந்த அறைக்குள் நுழைந்தனர்.
அவர்கள் முகத்தை மூடி இருந்ததால் அவர்கள் யார் என்பது அங்கிருந்தவர்களுக்கு கூட தெரியாது. கேகேவை தோற்கடிக்க இந்த திட்டத்தில் மூன்று மருத்துவர்கள் லாராவுடன் இணைந்து கொண்டனர்.
ஒரே நேரத்தில் விதுஷாவுக்கும், கங்காவுக்கும் இதயம் ஓபன் செய்வதாக முடிவு செய்து ஆரம்பித்தனர் முட்டாள்கள்.
விதுஷாவுக்கு உடனே ஆரம்பித்தனர் கத்தி வைத்து கிழிக்க பட கங்காவை நெருங்கிய சமயம் பட்டென்று கங்கா கண் விழிக்க அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
விதுஷாவுக்கு ஓபன் செய்ய பட்டதால் என்ன செய்வதென்று புரியவில்லை.
தன்னை நோக்கி கத்தியோட வந்த மருத்துவரை பார்த்தவள் எந்த வித பயமும் இல்லாமல் தூக்கத்தில் இருந்து எழுவது போல படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.கங்கா கண்களில் துளியும் பயம் இல்லை.
அவளுக்கு நேராக நின்று இருந்தான் தங்கள் ஹாஸ்பிட்டளில் இருந்து துரத்தி விட பட்டவன் அவனை பார்த்து நக்கலாக சிரித்தவள் என்ன எல்லாரும் ஒன்னு சேர்ந்து என்னை கொலை செய்ய போறீங்களா என்றவள் தன் ஆடைக்குள்
மறைத்து வைத்திருந்த மினி துப்பாக்கியை எடுத்தவள் எதிரே நின்று இருந்தவனை கண் இமைக்கும் நேரத்தில் சுட்டாள் நடு நெற்றியில் இறங்கியது குண்டு.
![](https://img.wattpad.com/cover/362763497-288-k729275.jpg)
VOCÊ ESTÁ LENDO
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?