கங்கா இரண்டு புடவைகள் மட்டும் எடுத்து கொண்டு நின்றாள். ராஜா அவள் எடுக்கட்டும் தான் இருந்தால் எதாவது மனதை ரணமாக்குவது போல் பேசிக் கொண்டிருப்பாள் என்று வேறு பிரிவுக்கு சென்று விட்டான்.
நகுலனும் தனக்கு சட்டை பார்ப்பதில் மும்பரமாக இருந்ததில் சாருவை கவனிக்க தவறிவிட்டான். சாரு இது தான் சமயம் என்று தனியாக நிற்க்கும் கங்கா அருகில் சென்றவள் நீ ரொம்ப சந்தோஷ பட்டுக்காத ராஜா தாத்தா கட்டாய படுத்தியதால தான் உன் கழுத்துல தாலி கட்டினான்.
உன்னை பிடிச்சி கட்டிருப்பான்னு ஆசையை வளர்த்துக்காத ராஜா மனசுல நான் தான் இருக்கேன் என்றவள் தங்களையே பார்த்து கொண்டிருக்கும் வேலை செய்யும் பெண்களை பார்த்து இவ எங்க வீட்டு அடிமை என் தாத்தா புத்தி கெட்டு போய் இவளை என் ராஜாக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு. ராஜா என்ன மறக்க முடியாமல் தவிக்கிறான்.
நான் என்ன சொன்னாலும் செய்வான், கேப்பான், நான் எவளோ காஸ்ட்லியான பொருள் கேட்டாலும் வாங்கி கொடுப்பான் என தேவை இல்லாமல் பெருமை பீத்தி கொண்டவள் ராஜாவை நெருங்கி சென்று
கொஞ்சும் குரலில் மாமா நானும் ட்ரெஸ் எடுத்துக்கவா எவ்வளவு விலையா இருந்தாலும் கொடுப்பீங்க தானே.ராஜா தலை அசைத்து உனக்கு பிடிச்சத எடுத்துக்கோ சாரு விலையை பத்தி கவலை படாதே என்றதும் விலை உயர்ந்த புடவைகள்,லெகாங்காக்கள், ஜீன்ஸ் என வாங்கி குவித்தாள்.
கடையில் வேலை செய்பவர்கள் அனைவரும் வாயை பிளந்தனர். அவர்கள் அனைவரும் கங்காவை பாவமாக பார்க்க கங்காக்கு அங்கு நிற்கவே கூச்சமாக இருந்தது. எதற்காக என தெரியாமல் கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
எதற்காக ராஜாக்கு தான் முக்கியம் இல்லை என்பதாலா? இல்லை அடிமை என்றதாலா? இல்லை அவமானத்தினாலா? கங்காக்கே தெரியவில்லை. அவள் மனம் எதையோ எதிர் பார்த்து ஏங்கியது.
சாரு மலையாக அடிக்கியவள் அதே கொஞ்சல் மொழியில் மாமா வாங்க நான் எடுத்துட்டேன் நீங்க வந்து என் செலக்சன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க என கத்தி அழைக்க கடையில் உள்ள எல்லோரும் ராஜாவை தான் பார்த்தனர்.
![](https://img.wattpad.com/cover/362763497-288-k729275.jpg)
YOU ARE READING
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?