வணக்கம்தோழமைகளே...
இந்த கதையை திரும்ப பதிவிட இயலாது.... வரும் ஞாயிறு இரவு எடுத்துவிடுவேன்.... மன்னித்துவிடுங்கள்...இனியும் இந்த கதையை பதிவிட இயலாது இந்த கதைக்கு பின் ஐந்தாறு பேர் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்... அதனால் இதை இனியும் வைத்து இருப்பது நல்லது அல்ல...
புத்தமாக வெளியிடுவதால் தான் இவ்வளவு பிரச்சனை மன்னித்துவிடுங்கள் புதிதாகவோ அலலது பாதி படிக்கின்றவர்களுக்கு ஒரு வேண்டு கோள்....
வருகின்ற 7/7/19 இல் இந்த கதை அன்பப்ளீஸ் செய்யப்படும்... அதனால் சிரமம் பாரமல் படித்துவிடுங்கள்...மன்னித்துவிடுங்கள்...பெங்களூர்.....
' இனிமையான காலைப்பொழுது வெண்கதிர்கள் பட்டுத் தெறிக்க ஆகாயம் வண்ணமழை தூவியது.... பறவையின் கீச்சிடும் சத்தம் வண்டிகளின் ஆர்ப்பாட்டத்தையும் தாண்டி ஆர்ப்பரித்தது.'
' சில்லென்ற காற்று தென்றலாய் வீச...! விடியலின் பொழுதை வரவேற்க காத்திருந்தன...சூரியனினின் கதிர்கள் தன்னை தழுவிக் கொள்ளட்டும் என்று சூரியனுள் கரைந்துப் போனது நிலா...
எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் விடியல் விடிந்தது...ஆனால் கொண்டாட்டத்திற்கும் ஆரவாரத்திற்கும் பஞ்சம் இல்லாமல் நடைப்பெற்று கொண்டு இருந்தது ..... மிகவும் பிரபலமான விளையாட்டு மைதானம்...ரேஸிங்காகவே உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஓடுதளம்...பந்தய விளையாட்டு என்றால் உயிரைக் கொடுத்து வெல்லும் இடமாக மாறிப்போகியது.
ஒவ்வொரு வருடமும் நடைப்பெறும் ரேஸிங் சாம்பியன் ரேஸ் இந்த வருடமும் கோலாகலமாக தொடங்கியது.... இதைக் காண மக்கள் அலைமோதுவார்கள்... உள்நாடு வெளிநாட்டு மக்கள் ரேஸிங் மீது தீராத காதல் கொண்ட ஆர்வளர்களே அதிகம் கலந்துக் கொள்ளும் நாள்.
வேறு வேறு ஓடு பாதைகள் இருந்தாலும் பைக் ரேஸ் மீது வெறி உள்ளவர்களே அதிகம் காண வருவார்கள்.. அதைப்போல் இந்த வருடமும் இளைளுர்கள் முதல் பெரியவர்கள் வரை ரேஸை காண ஆர்வத்தோடு காத்திருந்தனர்....பனியில் கூட தங்களது உற்சாகத்தை கூச்சலிட்டுக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்....
