“ நிழலும்
நிஜமும்
அறிந்திட...
காலங்கள்
தேவையில்லை..
நுட்பமான அறிவும்.
தெளிவான மனநிலையை
போதும்..”ஹாஸ்பிட்டல்...
மரகதம்மாள் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.. சைகையில் தனது அப்பாவை அழைத்தான்.
டாடி என் மனசை யாரும் புரிஞ்சுக்கவே மாட்டீங்களா...?
என்று ஜோகித் வேதனையடைந்தான்.ஏன்டா கண்ணா..?
எனக்கு ரோகிணியத்தான் புடிச்சு இருக்கு டாடி.. அதுக்காக மதியை பிடிக்காமலேன்னு எல்லாம் இல்லை... டாடி
அவ நல்லப் பொண்ணுத்தான்... அம்மாவை பத்திரமா கவனிச்சுக்கற.. இதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா டாடி..?
"முடியாது தான் கண்ணா...
! ""அப்புறம் ஏன் டாடி அம்மா இப்படி பண்றாங்க... என்கேஸ்மெண்ட் வரைக்கும் முடிவுபண்ணி இருக்கீங்க என்னைய கேட்காம..?
""அம்மாவ பத்தி தான் உனக்கு தெரியுமே டா...நீ என்ன முடிவு பண்ணி இருக்க ஜோகி...?
"
"நான் என்ன முடிவுத்தான் எடுக்கறது டாடி நான் குழப்பத்துல தவிச்சுப் போயி இருக்கேன்..?
டாடி""உன் மனசு என்ன சொல்லுதுடா கண்ணா...?
""ம்ம்மியும் ரோகிணியும் வேணும் டாடி...
""ரொம்ப கஷ்டம் கண்ணா... ஒண்ணை இழந்தா தான் இன்னொரு விஷயத்தை அனுபவிக்க முடியும்...? சரி நான் சொல்லறத கேளு...
""அந்தப் பொண்ணும் உன்னைய பிடிச்சு இருக்கா ..?
"
"தெரியல டாடி... ஆனா அவளுக்கும் என்னைய பிடிச்சுக்கு இருக்குன்னு நினைக்கிறேன் டாடி.
"
"நினைக்கறேன்னு சொல்லாதடா... அந்தப் பொண்ணுக்கும் உன்னை பிடிச்சு இருக்கான்னு தெரிஞ்சுக்கோ... உன் கூட வாழ்நாள் முழுவதும் இருப்பாளான்னு உறுதிப்பண்ணு... அப்புறம் அந்தப் பொண்ணப்பத்தி அம்மாக்கிட்ட பேசு..."
" அம்மா சரின்னா எனக்கும் சம்மதம் டா... ஆனா அம்மாவுக்கு பிடிக்கலைன்னா.. .... வேற வழி இல்லை கண்ணா.."
".அம்மாவும் நானும் இருக்கும்போதே உனக்கான ஒரு வாழ்க்கைய அமைஞ்சுக்கோடா... நாளைக்கு எதுவேனாலும் நடக்கலாம்.
நீ நல்லா இருப்பேன்னு நம்பிக்கையோட நாங்க இருப்போம்... டா கண்ணா.." என்று அவனது தோளிலில் தட்டிவிட்டு சென்றார் நவநீதம்.