வாழ்வில் கஷ்டங்கள்..
வரும்
அதை
வென்று வாழ்வது தான்..
உண்மையான வெற்றி.."ஓய் " என உதய் கூட அழைத்து வந்தனை அழைக்க "அந்த லாப்டாப்பைஎடு.." என்று கூற..
"லாப்டாப்பை ஆன் செய்து.. பென்டிரைவை இன்சர்ட் செய்தான்.. ரோகிணி உருவாக்கிய உழைப்பு... கனவு எல்லாம் அவன் கண்முன்..
"சபாஷ் ரோகிணி.. எனக்கு எந்த வேலையும் வைக்காம நீ எல்லாத்தையும் முடிச்சுட்டியே யூ ஆர் ஸ்மார்ட்..".என்று உதய். பென்டிரைவரை பத்திரமாக வைத்தான்.
"அதான் உனக்கு தேவையானது கிடைச்சுருச்சுல ப்ளீஸ் எங்களை விட்டுரு" என்று ரோகிணி கூற...
"கெட்டவன் கிட்ட வந்து நியாயம் தர்மத்தை பத்தி பேசறீயே "என்று உதய் ரோகிணியின் கன்னத்தை தடவினான்.
"நீ கூட அழகு தான் ஆனா... எனக்கு உன் மேலே துளி கூட ஆசையே இல்லை... சரி சொல்லு நீ செஞ்ச இந்த உதவிக்கு ..என்ன நான் செய்யட்டும்.... ஹான் நான் உனக்கு ஒரு வாய்ப்பு தரேன்." என்று உதய் தொடர்ந்தான்.
"இரண்டு பேர் இருக்கீங்க... நான் யாரையாவது ஒருத்தரை விடறேன்.. உயிரோட. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க " என்று உதய் காரின் மீது ஏறி அமர்ந்தான்.
ரோகிணியும் ஜோகித்தும் ஒருவரை ஒருவர் மாறிமாறி பார்த்தனர்.. கண்ணாலே பேசினர்.
"நீ போயிடு ரோகிணி.. என்று ஜோகித் சொல்ல..
""முடியாது என்னாலே யாருக்கும் எந்த ஒரு கஷ்டமும் வர கூடாது நீ போயிடு ஜோகித்" என்றாள்.
"அடடா இது சரிப்பட்டு வராது.. அண்ணா இரண்டு பேரையும் போட்டு தள்ளிட்டு வந்து சேருங்க சாகும் போதாவது இரண்டு பேரும் சேர்ந்து சாகட்டும் இவங்களை பிரிஞ்ச பாவம் நமக்கு வேண்டாம் " என்று உதய் கிளம்பினான்.
"சரி ஸார் நீங்க கிளம்புங்க..".என்று ரெளடி முதலில் ரோகிணியை நெருங்கினான்.
ஜோகித் தக்க சமயம் பார்த்து காத்திருந்தான் ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் ... என்று நினைத்தவன்.