மதி ரோகிணியின் மீது சிறு கோபம் கொண்டு இருந்தாள்...அவளை காண ஷாப்பிற்கு சென்றவள் அங்கு இல்லை என்று பணியாள் கூற... அவளது மொபைலிற்கு தொடர்புக் கொண்டாள்... ரீங் மட்டும் போய் கொண்டே இருந்தது... பதில் இல்லை
சரி நாளை வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்றாள்.
மாலை நேர மயக்கம் மெதுவாய் ஆட்கொள்ள...
ரோகிணியி ரிப்போர்ட் வாங்க... "அக்கவுண்ட் டிபார்டமெண்ட்டுக்குள் நுழைந்தாள்.. இளம்வயது பெண்... "மிஸ் ரோகிணி "என்று கூற... " எஸ் எனக்கு கொஞ்சம் டீட்டெல் வேனும் "என்று அவள் முன் அமரந்தாள்.
"யாரைப் பத்தின டீடெய்ல் வேனும் மேடம் ... பேஷன்ட் நேம் அட்மீட் பண்ண வருஷம் தேதி சொல்லுங்க...
"என்று அந்தப் பெண் கூற...
"மிஸ்டர் ஜோகித் மூன்று வருஷத்துக்கு முன்னாடி ஆக்ஸிடன் கேஸ்" என்று ரோகிணி கூற..
"வெயிட் மேடம்... " என்று கணிணியில் முகத்தைப் புதைத்தாள். ரோகிணிக்கு பரபரப்பு கூடியது கைகளை பிசைந்துக் கொண்டே இருந்தாள். 'ஒரு முறை ஜோகி க்கு எதுவும் ஆகவில்லை என்று யாரேனும் கூற மாட்டார்களா? ' என்று இதயத்தின் ஓரத்தில் ஓர் சின்ன ஆசை...
"மேடம் மிஸ்டர் ஜோகித் வயது 25 கரெக்ட்டுங்களா... போட்டோ பாருங்க இவர் தானா ஜோகித்..." என்று கணிணியை அவள் முன் திருப்பினாள்.
வண்ணப் பூக்களாய்
நீ
என் மனதில் ஒளிர்விடுவது
ஏன்...?
அவளை பற்றி அறிந்துக் கொள்ளும் ஆவலில் இருந்தான் எப்படி எப்படி..? தெரிந்துக் கொள்வது... என்று சிந்தனையில் இருந்தப்போது அவனது மொபைல் ரீங் ஆகியது...
யாராய் இருக்கும் என்று நினைத்தவன் தொடுத்திரையில் அன்நவுன் நம்பர் என்று தெரிந்தது... தொடர்ந்து அடித்துக் கொண்டு இருந்தவன் போனைஅட்டன் செய்து பேசினான்.
![](https://img.wattpad.com/cover/168428406-288-k521073.jpg)