"துரோகம்...
மன்னிக்க முடியாத
செயல்..."
"எனக்கு என்ன ஆசையா...? ரோகிணி உன்னை தவிக்க விட.. நான் அவ்வளவு தூரம் கெஞ்சுனேன்... நீ தானே மறுத்த நான் உன்னை வேண்டான்னு மறுப்பேனா...
"என்று ஜோகித் நினைத்தான்.
" உயிரில் கலந்து சென்றாயே...
மூச்சை விட்டு நிற்கின்றேன்...
மீண்டும் வருவாயா...?
என் உயிர் மீண்டு தருவாயா..?
எந்தன் காதலும் ...
உனக்கு தொல்லைதான் எனில்...
நான் தொலைந்துப் போனாலும்
உன்னை மட்டும் சேர்வேனே...? "
ரோகிணி... நான் என் வழியில தான் போனேன்... நீ தானே என் கண்ணுல வந்து நிற்கிற... ரோகிணி.. உன்னை பார்த்தாலே என்னோட கால்கள் ஏன் உன்னை நோக்கி வருதுன்னு தெரியல... ஒருவேளை இது தான் உண்மையான காதல் நான் ஏன்... இந்த காதல் நம்ப இரண்டு பேரையும் பிரிஞ்சு வச்சு வேடிக்கை பார்க்குது.
ரோகிணி யாருடைய திருமணத்திற்கு வந்து இருப்பாள்... என்று விசாரித்தான்.
மேலும் மேலும் துன்பமே உண்டாகியது ரோகிணிக்கு...
"மதி எங்கப்போறோம்...? வா சொல்லறேன்... "கல்யாண வேலைகள் ஒருபுறம் இருக்க... பாட்டு சத்தம் காதை பிளந்தது.
"ச்சூ வா...! ரோகிணி உன்கிட்ட பேசனும்" என்று தென்னை தோட்டத்திற்கு அழைத்து சென்றாள் மதி.. சத்தம் குறைவாக தான் கேட்டது.
"ரோகிணி... நீ என்னை மன்னிச்சுரு..
"என்று மதி கூற...
"என்ன ஆச்சு மதி... நீ ஏன் இப்படி எல்லாம் பேசற..."
"ரோகிணி என்னால இதுக்கு மேலேயும் மறைக்க முடியாது. மனசுக்குள்ள வலி அதிகமாகிட்டே இருக்கு... உன்னை பார்த்ததும்... என்னால முடியல ரோகிணி...
உனக்கு மனசுக்கு கஷ்டமா தான் இருக்கும்...ஐ யம் ஸாரி ரோகிணி."