"உண்மையான
காதலை..
தோற்கடிப்பது..
அந்த இறைவனாலும்..
முடியாத ஒன்று...""அண்ணா இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு..
"என்று ரோகிணி பதற்றமானாள்." மேடம் இன்னும் கொஞ்ச தூரம் தான் நாம் போயிடலாம்.."என்று டிரைவர் கூற..
வித்யா ரோகிணியின் கைகளை இறுக்கப் பற்றினார். "கவலைபடாத ரோகிணி எல்லாம் நல்லபடியா நடக்கும்.
நம்பிக்கையை விடாத உன் ஜோகி உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டான்.
"என்றாள்."என் ஜோகி என் ஜோகி "என்று ரோகிணியின் உதடுகள் முனுமுனுத்தது.
"ஜோகி நான் வந்துட்டேன்.. எனக்காக நீயும் உனக்கா நானும் வாழனும்.. ப்ளீஸ் ஜோகி கொஞ்ச நேரம் இதோ நான் வந்துருவேன் " என்று வேண்டினாள் .
வித்யாவிற்கோ இருப்பு கொள்ளவில்லை.. "தன்னால் என்ன செய்ய இயலும் என்று யோசித்தாள் ஒரு வேளை தான் முன்னாடியே ராபர்ட் வாழ்வில் வந்திருந்தாள் சிறு பெண்ணிற்கு இவ்வளவு துன்பங்கள் நேர்ந்து இருக்காதே.. நானும் சற்று கவனமாக அல்லவா இருந்து இருக்க வேண்டும்.
"
"ஸாரி ரோகிணி என்னாலேயும் உனக்கு இவ்வளவு கஷ்டம் தான். ராபர்ட்டை பற்றி பிறகு கூறிக் கொள்ளலாம்.."
" இப்போதைக்கு நாம் செல்வது ஜோகித்தை ரோகிணியோடு சேர்க்க வேண்டும் "என்று அவர்களது மனமும் வேண்டியது இறைவனிடம்."முதல்ல நீங்க மாலைய மாத்திக்கோங்க.. என்று ஐய்யர் பெற்றோர்களிடம் கூற.. இருவரும் மாற்றிக் கொண்டார்கள்.
"இந்தாங்க.. இந்த பொட்டு வச்சுக்கோங்கோ.. "என்று சந்தனத்தை சிவனேசனும் நவநீதம் வைத்துக் கொள்ள.. தொடர்ந்து வெற்றிலைப் பாக்கு மாற்றப்பட்டது.
"மாப்பிள்ளை இந்தாங்க.. உங்க அம்மா அப்பாக்கிட்ட கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க " என்று ஐயர் ஒவ்வொன்றாய் கூற.. செய்து முடித்தான் ஜோகித்.
அதை தொடர்ந்து மதியும் செய்ய வேண்டிய சடங்குகள் செய்ய..
அவர்கள் கொடுத்த தாம்பூல தட்டை.. பொண்ணு மாப்பிள்ளையிடம் நீட்டினார் ஐயர்.. "இந்தாங்க போய் சீக்கிரம் மாத்திட்டுவாங்க " என்று அனுப்பி வைத்தார்.
ஜோகித்தும் மதியும் தங்களது அறைக்கு சென்று கல்யாண உடைக்கு மாறினர்..
பத்து நிமிடம் கழித்து ஜோகித் மேடைக்கு வர மந்திரங்கள் ஓதப்பட்டது.. அதை தொடர்ந்து மதியும் வர.. தாம்பூலதட்டில் வைக்கப்பட்ட மாங்கல்யத்தை.. அனைவருக்கும் ஐயர் கொடுக்க செய்தார் முன்பே..
![](https://img.wattpad.com/cover/168428406-288-k521073.jpg)