பகுதி -39

2.4K 127 19
                                    

பகுதி - 39

"தேடல்
சுகமானது...
தான்
ஆனால்
தவிப்பு...
சுமையானது..."

"ராபர்ட் என்னை மன்னிச்சுரு.. "என்று சுனில் குமாரும் தழுவிக் கொள்ள...

"ம்ம்மி ...! ஐ யம் சோ ஸாரி நான் மன்னிக்க முடியாத தப்பு பண்ணிட்டேன் நான் ரொம்ப கெட்டவன் "என்று அழுதான்.

"கண்ணா அம்மா தான்டா தப்பு பண்ணிட்டேன் உன்னை விட்டுட்டு நான் போய் இருக்க கூடாது.. என்னோட பையனை நல்லபடியா வளர்க்க நான் எவ்வளோ கனவு கண்டேன் தெரியுமா.. ? "என்று வித்யா கண்ணீர் விட..

"நீங்க தான் என் ம்மமின்னு தெரியாம உங்களை நான் ரொம்ப தப்பா பேசிட்டேன் ஸாரி மா....சேரக்கூடாதவங்க கூட சேர்ந்து என்ன என்னமோ பண்ணிட்டேன் மா.. நான் ரோகிணிகிட்ட மன்னிப்பு கேட்கனும். ..." என்று ராபர்ட் வருந்தினான்.
ரோகிணிக்கு எதுவும் ஆகாது ராபர்ட்.. கண்டிப்பா நீ அவங்கிட்ட மன்னிப்பு கேட்கனும்.. அதுக்கு முன்னாடி... நீ செய்ய வேண்டிய வேலை இருக்கு என்று வித்யா கூற...
என்ன மம்மி..?

சொல்றேன்... இன்னிக்கு என்ன நாள்..?என்று வித்யா கேட்க..
இன்னிக்கு என்று சிந்தித்தவன்.. நாளைக்கு தான் ஜோகித்துக்கும் மதிக்கும் மேரேஜ் ம்ம்மி அச்சோ இந்த கல்யாணத்தை உடனே நிறுத்தனும்.."என்று துடித்தான்.

"ராபர்ட் ... இன்னிக்கு தான் மேரேஜ்.. என்று சுனில்குமார் கூற.."
"என்ன டாடி சொல்லறீங்க...உடனே கிளம்புங்க போலாம்..." என்று ராபர்ட் கூற...

" நான் ஒரு நாள் புல்லா மயக்கத்திலேயா இருந்தேன்.."
"ஆமாம் ராபர்ட்.. புல்லா குடிச்சு இருந்த..." என்று வேதனையுடன் வித்யா கூற..
"ஸாரி ம்ம்மி இனி மேல் இப்படி நடக்காது.. நீங்க ஆசைப்படற மாறி நான் இருப்பேன்..." என்று வித்யாவை தழுவினான் ராபர்ட்..

"வித்யா என்னை மன்னிச்சுருமா.".என்று சுனில்குமார்..கூற..
"ஆமாம்மா ராபர்ட் சின்ன பையன் நான் புத்தி சொல்லி வளர்த்து இருக்கனும்..ஆனா பையனோட பாசம் கண்ணை மறைச்சுருச்சு..ராபர்ட் கேட்டதை எல்லாம் வாங்கி தர ஆசைப்பட்டேன் ஆனா அது சரியா இருக்குமான்னு யோசிக்க தவறிட்டேன் மா.. "

என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது)Dove le storie prendono vita. Scoprilo ora